அரவிந்த் கெஜ்ரிவாலின் ஷீஷ் மஹால் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு! உள்ளே இத்தனை ஆடம்பரமா!
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஷீஷ் மஹால் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. உள்ளே இருக்கும் ஆடம்பரப் பொருட்களின் மதிப்பு என்ன?

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லமான ₹58.83 கோடி மதிப்பிலான 'ஷீஷ் மஹால்' தற்போது பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டைப் பொதுமக்கள் பார்வையிட ₹20 நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டின் ஒவ்வொரு அறையிலும் இடம்பெற்றுள்ள விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் ஆடம்பர வசதிகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
ஷீஷ் மஹால் சர்ச்சையின் பின்னணி
டெல்லியின் 6, ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் அமைந்துள்ள இந்த பங்களா, அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்தபோது அவரது அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது. இந்த வீட்டைப் புதுப்பிக்கவும் ஆடம்பர வசதிகளை ஏற்படுத்தவும் பொதுமக்களின் வரிப்பணம் அதிக அளவில் செலவிடப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியது.
குறிப்பாக, எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதாகக் கூறிய கெஜ்ரிவால், இவ்வளவு ஆடம்பரமான வீட்டில் வசிப்பதாக பாஜக விமர்சித்தது. இதனால் இந்த பங்களாவுக்கு 'ஷீஷ் மஹால்' என்ற பெயர் சூட்டப்பட்டது. 2025 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த விவகாரம் முக்கிய அரசியல் பிரச்சினையாக முன்வைக்கப்பட்டது.
கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, 2024 அக்டோபரில் இந்த வீட்டைக் காலி செய்தார். தற்போது இந்த வீட்டை பொதுமக்கள் நேரில் பார்வையிடும் வகையில் டெல்லி அரசு திறந்துள்ளது. வீட்டில் செய்யப்பட்ட செலவுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட பொருட்களை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
ஷீஷ் மஹாலில் அப்படி என்ன இருக்கிறது?
இந்த பங்களாவில் இடம்பெற்றுள்ள பொருட்களின் மதிப்புப் பட்டியல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
- கெஜிர்வால் மகனின் படுக்கையறை மதிப்பு - ₹1.11 கோடி.
- மகளின் படுக்கையறை மதிப்பு - ₹83 லட்சம்.
- இரண்டு மாஸ்டர் படுக்கையறைகள் மற்றும் விருந்தினர் படுக்கையறைகளின் மதிப்பு - தலா ₹80 லட்சத்திற்கும் அதிகம்.
- உடற்பயிற்சிக் கூடத்தின் மதிப்பு - ₹22 லட்சம்.
- மசாஜ் படுக்கையின் விலை - ₹4 லட்சம்.
- இரண்டு சமையலறைகளின் மதிப்பு - தலா ₹50 லட்சம்.
- இரண்டு கதவுகள் கொண்ட குளிர்சாதனப் பெட்டியின் விலை - ₹4.5 லட்சம்.
- சரவிளக்கின் விலை - ₹11.56 லட்சம்.
- படுக்கைகளின் விலை - தலா ₹4 லட்சம்.
- இரண்டு பேர் அமரும் சோபாவின் விலை - ₹5.47 லட்சம்.
- தொலைக்காட்சி அலகுகளின் மதிப்பு - ₹30 லட்சம்.
இவை தவிர, வீட்டில் ஜக்கூசி, ஸ்பா உள்ளிட்ட பல்வேறு ஆடம்பர வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இதனைப் பார்வையிட்ட மக்கள் இதுதான் அரவிந்த் கெஜிர்வால் வாழ்ந்த எளிமையான வாழ்க்கையா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
🚨 Arvind Kejriwal's ₹58.83 crore Sheesh Mahal is now open to the public, with tickets priced at ₹20. His son's bedroom is worth ₹1.11 crore, while his daughter's bedroom is worth ₹83 lakh. The two master bedrooms and guest bedrooms are also worth more than ₹80 lakh each. The gym area is worth ₹22 lakh, while the massage bed costs ₹4 lakh. The two kitchens are worth ₹50 lakh each, and the double-door refrigerator costs ₹4.5 lakh. An ₹11.56 lakh chandelier, beds worth ₹4 lakh each, a ₹5.47 lakh two-seater sofa and TV units worth ₹30 lakh. Such a simple life of former Delhi CM Arvind Kejriwal.
— TEJASH 🚩 (@Tejashyy) November 27, 2026
ட்ரெண்டிங் செய்திகள்























