மேலும் அறிய

கத்தியுடன் மிரட்டல் மற்றும் கஞ்சா கடத்தல்: மயிலாடுதுறையில் இருவர் மீது பாய்ந்த குண்டர் தடுப்பு சட்டம்.. 

மயிலாடுதுறையில் பொது அமைதிக்கு பங்கம் மற்றும் கஞ்சா விற்பனை வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், சமூக விரோத செயல்களை முற்றிலும் ஒடுக்கவும் காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த வழக்கில் தொடர்புடைய நபர் மற்றும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் ஆகிய இருவரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய சம்பவம்

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை பகுதியில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி அன்று, மேலத்தெரு, கருங்குயில்நாதன்பேட்டை, மணக்குடி பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் 26 வயதான மகன் முகிலன் என்பவர் கையில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்துள்ளார். 

அன்றைய தினம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில், முகிலன் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் விரிவான புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளி முகிலனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் கஞ்சா வேட்டை

இதேபோன்று, மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன்கோவில் தாமரைக்குளம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், கடந்த அக்டோபர் 19-ம் தேதி அன்று வைத்தீஸ்வரன்கோவில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கஞ்சா வேட்டை நடத்தினர். அப்போது தாமரைக்குளத்தெரு, வைத்தீஸ்வரன்கோவிலைச் சேர்ந்த கண்ணன் என்பரது 26 வயதான மகன் விக்னேஷ் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியதுடன், அவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு மற்றும் சிறையில் அடைப்பு

மேற்படி இரு நபர்களும் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. சினேஹா ப்ரியா, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், முகிலன் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவுக்கு இணங்க, முகிலன் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் இன்று 26-ம் தேதி தடுப்புக்காவல் சட்டத்தின் படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

நடப்பாண்டில் தடுப்பு காவல் நடவடிக்கை விவரங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டில் கொலை குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 7 நபர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 34 நபர்கள், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 17 நபர்கள், கஞ்சா விற்பனை குற்றங்களில் ஈடுபட்ட 24 நபர்கள், குட்கா விற்பனை குற்றங்களில் ஈடுபட்ட 1 நபர் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 6 நபர்கள் என மொத்தம் 89 நபர்கள் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காவல் கண்காணிப்பாளரின் கடுமையான எச்சரிக்கை

மாவட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகள் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வோர், அதேபோன்று மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் என எவராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தரங்கம்பாடி கடற்கரையில் திடீர் பாதுகாப்புப் படை குவிப்பு - காரணம் என்ன?
தரங்கம்பாடி கடற்கரையில் திடீர் பாதுகாப்புப் படை குவிப்பு - காரணம் என்ன?
"சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-வைக் காப்பாற்ற நினைத்தால் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படும்!" - நெல்லை ஜீவா பகிரங்க எச்சரிக்கை.
மது விற்பனையில் ஈடுபட்ட கணவன் - மனைவி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - எஸ்.பி. சினேஹா ப்ரியா அதிரடி நடவடிக்கை!
மது விற்பனையில் ஈடுபட்ட கணவன் - மனைவி உட்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு - எஸ்.பி. சினேஹா ப்ரியா அதிரடி நடவடிக்கை!
மணலில் மலர்ந்த 17-ஆம் நூற்றாண்டு வரலாறு; தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்.
மணலில் மலர்ந்த 17-ஆம் நூற்றாண்டு வரலாறு; தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்.
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
மீண்டும் கூட உள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - வெளியான திடீர் அறிவிப்பு!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
“அய்யய்யோ! வந்துட்டாரே கலாய்ப்பாரே” - உதயநிதியை தனது பாணியில் கிண்டலடித்த முதல்வர் விஜய்!
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பாக குவிக்கப்படும் போலீசார் - அடுத்தது என்ன?
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கம் கொடுத்த சென்னை தொழிலதிபர்.. யார் இந்த வர்தமான் ஜெயின்? வியக்க வைக்கும் பின்னணி!
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
வானமே எல்லை! - விண்வெளியில் தரவு மையம் அமைக்க உள்ள space x!: முழு விவரம் தெரியுமா?
வானமே எல்லை! - விண்வெளியில் தரவு மையம் அமைக்க உள்ள space x!: முழு விவரம் தெரியுமா?
Innova Hycross: புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
"தவெக எம்எல்ஏ-வை சும்மா விடக்கூடாது.. 116 நாட்களாக என்ன பண்ணிங்க?" பிரஸ் மீட்டில் எகிறிய உதயநிதி!
Embed widget