மேலும் அறிய

Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: 100 ஆண்டுகால போராட்டம் முதல் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வரை - முழு பின்னணி

Thiruparankundram Case History: திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை, நில உரிமைப் பிரச்னை, சட்டப்போராட்டம் குறித்த விவரங்கள்.

திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோயில் மேல் பல ஆண்டுகாலமாக கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள மற்றொரு தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என பிரச்னை நீண்ட காலகாலமாக நீடித்து வருகிறது.  இந்த விவகாரம் பெரிதும் தெரியாத நிலையில், கடந்த ஒரு சில வருடமாக மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த கார்த்திகை தீபத்தன்று மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவு நடைமுறைப்படுத்தாமல் இருந்ததால், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று, மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என அதன் தீர்ப்பையும் தமிழக அரசு மீறியது. தற்போது நாளை தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை, நூற்றாண்டு கால நில உரிமைப் பின்னணியையும், கடந்த ஓராண்டாக (2025–2026) நடைபெற்று வரும் தீவிர சட்ட மற்றும் அரசியல் மோதல்கள் குறித்த பின்னணி விவரங்கள்.

பிரச்சினையின் அடிப்படை என்ன?
 

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தரப்பில், கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக மலை உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்திலேயே கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ள பகுதிக்கு அருகே ஒரு கல்தூண் உள்ளது. இது பண்டைய காலத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட 'தீபத்தூண்' என இந்து அமைப்புகள் கூறுகின்றன. ஆனால், அரசு மற்றும் தர்கா தரப்பில் அது ஆங்கிலேயர் காலத்தில் நில அளவீட்டுக்காக நடப்பட்ட 'சர்வே கல்' என வாதிடப்படுகிறது.


Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: 100 ஆண்டுகால போராட்டம் முதல் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வரை - முழு பின்னணி

வரலாற்று மற்றும் சட்டப் பின்னணி (1915 – 1931)

1915: திருப்பரங்குன்றம் மலை உரிமை மற்றும் பயன்பாடு தொடர்பான ஆரம்பகட்ட முரண்பாடுகள் தொடங்கின.

1920: திருப்பரங்குன்றம் முழு மலையும் கோயிலுக்குச் சொந்தமானது எனக் கோரி கோயில் நிர்வாகம் 1920-இல் சிவில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், சாகுபடி நிலம் மற்றும் தர்கா பகுதி தவிர்த்து மலையின் மற்ற பகுதிகளுக்கு கோயில் உரிமை கோரியது. நெல்லித்தோப்பு பகுதிக்கு முஸ்லிம் தரப்பும், காலியிடங்களுக்கு அரசும் உரிமை கோரின.

1923: மதுரை துணை நீதிமன்றம், நெல்லித்தோப்பு, தர்கா பகுதி, கொடிமரம் மற்றும் படிக்கட்டுகள் தவிர்த்து மலையின் பெரும்பாலான பகுதிகள் கோயிலுக்குச் சொந்தமானவை என தீர்ப்பளித்தது.

1926: மேல்முறையீட்டில், மலை அரசுக்குச் சொந்தமானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தது.

1931: லண்டன் பிரிவு கவுன்சில் 1923-ஆம் ஆண்டின் தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது. தர்கா, படிக்கட்டுகள் மற்றும் நெல்லித்தோப்பு ஆகியவை பாதுகாக்கப்பட்டன.

மீண்டும் தொடங்கிய சர்ச்சைகள்

1994 ஆம் ஆண்டு முதலே மலை உச்சித் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கின. 2021 இல் தர்காவில் மரக் கொடிமரத்திற்குப் பதிலாக இரும்புக் கொடிமரம் நடுவது தொடர்பாகவும் சர்ச்சை எழுந்து சட்டப் போராட்டங்கள் தொடர்ந்தன.

உயர்நீதிமன்ற தீர்ப்புகளும் மோதல்களும் (2025 – 2026)

* பிப்ரவரி 2025: மலையை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கக் கோரி இந்து முன்னணி போராட்டத்திற்கு அனுமதி கோரிய நிலையில், பழங்காநத்தம் சந்திப்பில் போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.

* ஜூன் 2025: மலையில் அசைவ உணவு மற்றும் விலங்கு பலியிடலுக்கு எதிரான மனுக்களில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டதால், வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது.

* அக்டோபர் 2025: மலையில் விலங்கு பலியிடவும், அசைவ உணவு சமைக்கவோ, எடுத்துச் செல்லவோ, பரிமாறவோ தற்காலிகத் தடை விதித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.


Thiruparankundram Case: திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: 100 ஆண்டுகால போராட்டம் முதல் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வரை - முழு பின்னணி

* டிசம்பர் 2025: வழக்கமான இடங்களுடன் சேர்த்து 'தீபத்தூண்' கல் தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை நிறைவேற்றக் கோரி டிசம்பர் 3 அன்று இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தியதால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாநில அரசு மேல்முறையீடு செய்தது.

* ஜனவரி 2026: தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஜனவரி 6 அன்று உறுதி செய்தது. போராட்டக்காரர்கள் மீதான வழக்கை விசாரிக்க ஜனவரி 27 அன்று நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

* ஜூன் - ஆகஸ்ட் 2026: உயர் நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தூணில் தீபம் ஏற்றும் பாரம்பரியம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி மனுவை ஆய்வு செய்ய முடிவு செய்தது.

* நவம்பர் 2026: உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம் (நவம்பர் 20), நவம்பர் 24 கார்த்திகை தீபத்தன்று மட்டும் 'தீபத்தூணில்' தீபம் ஏற்ற ஒருமுறை அனுமதி அளித்தது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

* நவம்பர் 24, 2026: கார்த்திகை தீபத் திருநாளன்று, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே மகா தீபம் ஏற்றப்பட்டது.

* நவம்பர் 25, 2026: உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததைத் தொடர்ந்து, இராம. இரவிக்குமார், வழக்கறிஞர் வி. ராமசுப்பு, இந்து தர்ம பரிஷத் உள்ளிட்டோர் மதுரை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையர் மற்றும் கோயில் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைத் தாக்கல் செய்தனர். 

அன்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மதுரை ஆட்சியர், “தேவஸ்தான அறங்காவலர் குழு பாரம்பரிய வழக்கத்தைக் காரணம் காட்டி தீபத்தூணில் தீபம் ஏற்ற ஒப்புதல் அளிக்கவில்லை” எனக் கூறி, உத்தரவை நிறைவேற்ற முடியாததற்கு மன்னிப்பு கோரினார்.

மலையில் உள்ள தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவு

நவம்பர் 27: இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மற்றும் இடையீட்டு மனுக்கள் மீது தீவிர விசாரணை நடைபெற்றது. இதில், மதுரை ஆட்சியரின் முதற்கட்ட விளக்கத்தை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்து அறங்காவலர் குழு நிறைவேற்றிய தீர்மானம் "நீதிமன்றத்தை நேரடியாகவும் அப்பட்டமாகவும் அவமதிக்கும் செயல்” எனக் கடுமையாகக் கண்டித்தனர். மேலும், அறங்காவலர் குழுவை தற்காலிகமாக கலைத்தும் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, நாளை திருப்பரங்குன்றம் மலை முழுவதும் சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் கொண்டுவர உத்தரவிட்ட நீதிபதிகள், தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவிட்டுள்ளதுடன், இவ்விவகாரத்தில் தமிழக தலைமைச் செயலர் நேரில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்தது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய அஞ்சல் துறையில் 24 டிரைவர் பணியிடங்கள்! 10-ம் வகுப்பு மற்றும் ஓட்டுநர் உரிமம் இருந்தால் போதும்
இந்திய அஞ்சல் துறையில் 24 டிரைவர் பணியிடங்கள்! 10-ம் வகுப்பு மற்றும் ஓட்டுநர் உரிமம் இருந்தால் போதும்
சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் வெளியான தீர்ப்பு - முழு விவரம் தெரியுமா?
சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் வெளியான தீர்ப்பு - முழு விவரம் தெரியுமா?
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
MK Stalin: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவா? போட்டுடைத்த மு.க.ஸ்டாலின்!
MK Stalin: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவா? போட்டுடைத்த மு.க.ஸ்டாலின்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் வெளியான தீர்ப்பு - முழு விவரம் தெரியுமா?
சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் வெளியான தீர்ப்பு - முழு விவரம் தெரியுமா?
ஊழல் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி.. முதல்வர் விஜய்யை விளாசிய திமுக!
ஊழல் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி.. முதல்வர் விஜய்யை விளாசிய திமுக!
“நீங்கள் வடிப்பது உண்மையான கண்ணீரா? முதலை கண்ணீரா?” - திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்
“நீங்கள் வடிப்பது உண்மையான கண்ணீரா? முதலை கண்ணீரா?” - திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்
வசந்தம் கார்த்திகேயன் விவகாரம்;
வசந்தம் கார்த்திகேயன் விவகாரம்; "பெண்களை துச்சமாக நினைப்பதே திமுக மரபணு.." விளாசிய தவெக
ஏஐ மூலம் வக்கிரமாக சித்தரிப்பீங்களா? ஒருத்தரையும் விடமாட்டேன்.. தவெகவினருக்கு மேயர் பிரியா எச்சரிக்கை!
ஏஐ மூலம் வக்கிரமாக சித்தரிப்பீங்களா? ஒருத்தரையும் விடமாட்டேன்.. தவெகவினருக்கு மேயர் பிரியா எச்சரிக்கை!
CM Vijay: பெரம்பூர் தொகுதி விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பு.. முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி செய்து அதிரடி
CM Vijay: பெரம்பூர் தொகுதி விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பு.. முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி செய்து அதிரடி
TN By Election:
TN By Election: "அம்பாசமுத்திரம், பெருந்துறைக்கு மட்டும் இடைத்தேர்தல்.." நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு - அப்போ மற்ற 3 தொகுதிகள்?
Embed widget