மேலும் அறிய

சிக்காத சிறுத்தை: தயாராகும் 10 சென்சார் கேமராக்கள்; அதிகாரிகளின் அடுத்த மூவ்!

மயிலாடுதுறை சிறுத்தை நடமாட்டம் இருப்பதை அடுத்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை 
 
மயிலாடுதுறை நகரில் கடந்த 2 -ம் தேதி இரவு சிறுத்தை ஒன்று  நடமாடிய வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறை தீயணைப்புத்துறை காவல்துறை இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று சிறுத்தை பதுங்கி இருப்பதாக கருதப்பட்ட கூறைநாடு தெற்கு சாலிய தெரு , செங்கழநீர் பிள்ளையார் கோயில் தெரு,  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  வலைகள் கயிறுகளுடன் தீவிரமாக சிறுத்தையை  தேடி வந்தனர்.  


சிக்காத சிறுத்தை: தயாராகும் 10 சென்சார் கேமராக்கள்; அதிகாரிகளின் அடுத்த மூவ்!

இடத்தை மாற்றிய சிறுத்தை 

இந்நிலையில் இன்று அதிகாலை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை பதுங்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் அறுவடை இயந்திரத்தின் மேல் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் சிறுத்தை கடந்து சென்றதை பார்த்ததாக அளித்த தகவலின் பெயரில் வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டுட்டுள்ளனர்.  மூன்று கிலோமீட்டர் தூரம் சிறுத்தை  கடந்து வந்து பதுங்கியுள்ளது. சிறுத்தையின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டு மார்க் செய்யப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சிக்காத சிறுத்தை: தயாராகும் 10 சென்சார் கேமராக்கள்; அதிகாரிகளின் அடுத்த மூவ்!

திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் ஆய்வு

இந்நிலையில் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் ஐ எஃப் எஸ், நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் சிறுத்தை நடமாட்டம் உள்ள சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையின் கால் தடத்தை வைத்தும், சாட்டிலைட் புகைப்படம் கூகுள் மேப் கொண்டும், அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் கூறுகையில், சிறுத்தை நடமாட்டம், அதன் நகர்வுகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் வனத்துறை அதிகாரிகள், கால்நடை துறை மருத்துவர்கள் இப்பகுதிகளில் இருப்பதாகவும் தெரிவித்தார்.


சிக்காத சிறுத்தை: தயாராகும் 10 சென்சார் கேமராக்கள்; அதிகாரிகளின் அடுத்த மூவ்!

சிறுத்தையை பிடிக்கும் பணி

சிறுத்தையை கண்காணிக்க ஆறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக 10 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். வெவ்வேறு இடத்தில் கேமராக்களை பொருத்தி நடமாட்டம் எங்கு உள்ளது என கண்டறிய உள்ளதாகவும் கூறினார். பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும், இந்த வகையான சிறுத்தை மனிதர்களுக்கு அச்சுறுத்தல் தராது எனவும், முடிந்தவரை மனிதர்களை பார்த்தால் அது விலகிச் செல்ல தான் செய்யும் என கூறினார். இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவில் வெளியில் படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இப்பகுதிகளில் 1990 காலகட்டங்களில் மட்டும் தான் சிறுத்தை காரைக்கால் பகுதிக்கு வந்ததாகவும், அதன் பிறகு தற்போது மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்படுவதாக தெரிவித்தார்.


சிக்காத சிறுத்தை: தயாராகும் 10 சென்சார் கேமராக்கள்; அதிகாரிகளின் அடுத்த மூவ்!

எட்டு வயது சிறுத்தை 

சிறுத்தைக்கு ஏற்படும் இடையூறுகளைப் பொறுத்து அதன் வேகம் அதிகரிக்கும் என தெரிவித்தார். மேலும் சிறுத்தைக்கு ஏழிலிருந்து எட்டு வயது வரை இருக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து 5 சிறப்பு அதிகாரிகள் வருகை தர உள்ளதாகவும், இரண்டு கூண்டுகள் மதுரையிலிருந்து வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இரவில் சிறுத்தைகளை கண்காணிப்பதற்கு தெர்மல் ட்ரோன்  கேட்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் அது நடமாட்டம் இருக்காது எனவும், இரவு நேரத்தில் நடமாட்டம் இருக்கலாம் என தெரிவித்தார்.


சிக்காத சிறுத்தை: தயாராகும் 10 சென்சார் கேமராக்கள்; அதிகாரிகளின் அடுத்த மூவ்!

பள்ளிகளுக்கு விடுமுறையும், பாதுகாப்பும் 

சிறுத்தை நடமாட்டத்தால் முதல் நாள் கூறைநாடு பள்ளியில் உள்ள  ஒரு புள்ளிக்கு மட்டும் விடுமுறை அளித்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து இன்று ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உள்ள 7 பள்ளிகளுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது  மூன்றாவது நாளாக சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளாக கருதப்படும் பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு காரணமாக மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலைப்பள்ளி, டாக்டர் அம்பேத்கார் நகராட்சி தொடக்கப்பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளுர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தூய அந்தோணியார் துவக்கப்பள்ளி மறையூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகு ஜோதி நர்சரி பிரைமரி ஸ்கூல், கேம் பிரிட்ஜ் ஸ்கூல் ஆகிய 9 பள்ளிகளுக்கு  நாளை ஏப்ரல் 05 -ம் தேதி  விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 4 பள்ளிகளுக்கு வனத்துறை தீயணைப்பு துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் பாதுகாப்புடன் அச்சமின்றி தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சிக்காத சிறுத்தை: தயாராகும் 10 சென்சார் கேமராக்கள்; அதிகாரிகளின் அடுத்த மூவ்!

சிறப்பு குழு வருகை

சிறுத்தை பிடிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மயிலாடுதுறைக்கு வருகை புரிந்துள்ளனர். அவர்கள் சென்சார் கேமரா 10  பொறுத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளனர். மேலும் கூண்டு வைத்து பிடிப்பதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். சிறுத்தை இரவு நேரத்தில் இந்த இடத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு உள்ளதால் 5 கிலோமீட்டர் பரப்பளவில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"கேக் வேண்டாம்... தங்கச்சி தான் வேணும்!" - 9 வயதுச் சிறுவனின் பிறந்தநாள் கோரிக்கையால் கலங்கிய ஆட்சியர் அலுவலகம்.. 
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Embed widget