மேலும் அறிய

Mayiladuthurai Leopard: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது - சிறுத்தையை பிடிக்க வனத்துறை எடுத்த முடிவு

மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்க அதிநவீன கேமராக்கள் பயன்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் விரைவில் சிறுத்தை பிடிபட கூடும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறையில் சிறுத்தை 

டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் செம்மங்குளம் பகுதியில் கடந்த ஏப்ரல் 2 -ம் தேதி இரவு சிறுத்தை ஒன்று  நடமாட்டுவதாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், சிறுத்தையின் காலடி தடத்தை வைத்து சிறுத்தை ஊருக்குள் வந்துள்ளதை உறுதி செய்தனர். தொடர்ந்து சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறை தீயணைப்புத்துறை காவல்துறை இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 3-ம் தேதி சிறுத்தை பதுங்கி இருப்பதாக கருதப்பட்ட கூறைநாடு தெற்கு சாலிய தெரு, செங்கழநீர் பிள்ளையார் கோயில் தெரு,  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  வலைகள் கயிறுகளுடன் தீவிரமாக சிறுத்தையை  தேடி வந்தனர். 


Mayiladuthurai Leopard: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது - சிறுத்தையை பிடிக்க வனத்துறை எடுத்த முடிவு

இடத்தை மாற்றும் சிறுத்தை 

இந்நிலையில் நேற்று அதிகாலை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை பதுங்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் அறுவடை இயந்திரத்தின் மேல் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் சிறுத்தை கடந்து சென்றதை பார்த்ததாக அளித்த தகவலின் பெயரில் வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டுட்டுள்ளனர்.  மூன்று கிலோமீட்டர் தூரம் சிறுத்தை கடந்து வந்து பதுங்கியுள்ளது. சிறுத்தையின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டு மார்க் செய்யப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Mayiladuthurai Leopard: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது - சிறுத்தையை பிடிக்க வனத்துறை எடுத்த முடிவு

திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் ஆய்வு

திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் ஐ எஃப் எஸ், நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் சிறுத்தை நடமாட்டம் உள்ள சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையின் கால் தடத்தை வைத்தும், சாட்டிலைட் புகைப்படம் கூகுள் மேப் கொண்டும், அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், சிறுத்தை நடமாட்டம் , அதன் நகர்வுகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் வனத்துறை அதிகாரிகள், கால்நடை துறை மருத்துவர்கள் இப்பகுதிகளில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

 


Mayiladuthurai Leopard: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது - சிறுத்தையை பிடிக்க வனத்துறை எடுத்த முடிவு

சிறுத்தையை பிடிக்கும் பணி

சிறுத்தையை கண்காணிக்க 11 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக விலங்குகளின் உடல் சூட்டை வைத்து அவைகள் இருட்டு மற்றும் காட்டுப் பகுதியில் இருந்தாலும் கண்டறியும் தெர்மல் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையை தேடும் பணிக்காக வரவழைத்துள்ளனர். இதனால் மூலம் இரவு வேளையில் சிறுத்தை நடமாட்டத்தை எளிதில் கண்டறிய முடியும் என தகவல் தெரிவித்துள்ளனர். வெவ்வேறு இடத்தில் கேமராக்களை பொருத்தி நடமாட்டம் எங்கு உள்ளது என கண்டறிய உள்ளதாகவும் கூறினார். 


Mayiladuthurai Leopard: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது - சிறுத்தையை பிடிக்க வனத்துறை எடுத்த முடிவு

சிறப்பு குழு வருகை

சிறுத்தை பிடிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் குழு மயிலாடுதுறைக்கு வருகை புரிந்துள்ளனர். அவர்கள் சென்சார் கேமரா 16  பொறுத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளனர். மேலும் மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட இரண்டு கூண்டு வைத்து பிடிப்பதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். சிறுத்தை இரவு நேரத்தில் இந்த இடத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு உள்ளதால் 5 கிலோமீட்டர் பரப்பளவில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தை பகலில் ஓய்வெடுத்து இரவில் வேட்டையாடும் இனம் என்பதால் அதனை இரவு வேளையில் பிடிப்பதற்கு வனத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் இன்று காலை கூண்டுகளிலும் சிறுத்தை சிக்காத நிலையில் வனத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். 


Mayiladuthurai Leopard: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது - சிறுத்தையை பிடிக்க வனத்துறை எடுத்த முடிவு


பொதுமக்களுக்கு ஆறுதல் செய்தி

இந்த வகையான சிறுத்தை மனிதர்களுக்கு அச்சுறுத்தல் தராது எனவும், முடிந்தவரை மனிதர்களை பார்த்தால் அது விலகிச் செல்ல தான் செய்யும் எனவும், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் பகுதிகளில் பொதுமக்கள் இரவில் வெளியில் படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் அரசு சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


Mayiladuthurai Leopard: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது - சிறுத்தையை பிடிக்க வனத்துறை எடுத்த முடிவு

எட்டு வயது சிறுத்தை 

சிறுத்தைக்கு ஏற்படும் இடையூறுகளைப் பொறுத்து அதன் வேகம் அதிகரிக்கும் என தெரிவித்தார். மேலும் சிறுத்தைக்கு ஏழிலிருந்து எட்டு வயது வரை இருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

தெர்மல் ட்ரோன் கேமரா மாதிரி காட்சி
தெர்மல் ட்ரோன் கேமரா மாதிரி காட்சி

பள்ளிகளுக்கு விடுமுறையும், பாதுகாப்பும் 

சிறுத்தை நடமாட்டத்தால் முதல் நாள் கூறைநாடு பள்ளியில் உள்ள  ஒரு புள்ளிக்கு மட்டும் விடுமுறை அளித்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து நேற்று ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உள்ள 7 பள்ளிகளுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது  மூன்றாவது நாளாக சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளாக கருதப்படும் பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு காரணமாக மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலைப்பள்ளி, டாக்டர் அம்பேத்கார் நகராட்சி தொடக்கப்பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளுர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தூய அந்தோணியார் துவக்கப்பள்ளி மறையூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அழகு ஜோதி நர்சரி பிரைமரி ஸ்கூல், கேம் பிரிட்ஜ் ஸ்கூல் ஆகிய 9 பள்ளிகளுக்கு  நாளை ஏப்ரல் 05 -ம் தேதி  விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 4 பள்ளிகளுக்கு வனத்துறை தீயணைப்பு துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்புடன் அச்சமின்றி தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Mayiladuthurai Leopard: ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது - சிறுத்தையை பிடிக்க வனத்துறை எடுத்த முடிவு


ஆட்டை வேட்டையாடியதா சிறுத்தை?

இந்நிலையில் சித்தர்காடு தண்டபாணி செட்டி தெரு பகுதியில் காவிரி கரை அருகில் ஆடு ஒன்று கழுத்துப் பகுதியில் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தது. சிறுத்தை கடித்து குதறிவிட்டதாக அப்பகுதியில் பீதி ஏற்பட்டது. தொடர்ந்து விரைந்து வந்த வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இரவு 11 மணி அளவில் அரை மணி நேரம் நாய்கள் நாய் குலைத்தது, காலையில் எழுந்து பார்க்கும் போது ஆடு இறந்து கிடப்பதாகவும் குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். ஆட்டை சிறுத்தை தான் கடித்ததா? என்று மருத்துவக் குழுவினர் பரிசோதனை, மற்றும் சிறுத்தையின் கால் தடம் கிடைத்தால் தான் உறுதியாக கூற முடியும், தற்போது ஒரு வலிமை வாய்ந்த விலங்கு ஆட்டின் கழுத்தை கடித்து முறித்துள்ளதாக தெரிகிறது. 70 சதவீதம் இது சிறுத்தையாக இருக்காமல் என யூகிக்க முடிகிறது. பின்னர் தான் உறுதிப்படுத்த முடியும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"எங்கள் வாழ்நாளைப் பள்ளிக்கே தந்துவிட்டோம்!" - அமைச்சரிடம் மனு அளித்து கதறிய பகுதிநேர ஆசிரியர்கள்!
ஆடி மாத பிரதோஷம்: சீர்காழி ஆதி ஸ்ரீ நாகேஸ்வரமுடையார் திருக்கோயிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்..!
ஆடி மாத பிரதோஷம்: சீர்காழி ஆதி ஸ்ரீ நாகேஸ்வரமுடையார் திருக்கோயிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்..!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!
"கர்நாடகா வீசும் வலையில் முதல்வர் விழந்து விடக்கூடாது!" - காவிரி விவகாரத்தில் கொதிக்கும் பி.ஆர்.பாண்டியன்!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget