மேலும் அறிய

சீர்காழி பத்ரகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா: பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பத்ரகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளனர்.

சீர்காழி:மயிலாடுதுறை மாவட்டத்தின் ஆன்மீகப் பெருமை வாய்ந்த நகரமான சீர்காழியில், பிடாரி தெற்கு வீதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. தை மாத மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவில், சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

சீர்காழியில் ஆன்மீக ஊர்வலம்

ஆண்டுதோறும் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை இக்கோயிலில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தீமிதி திருவிழாவான இன்று காலை  நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் மற்றும் விரதமிருந்த பக்தர்கள் பால்குடம், பால்காவடி மற்றும் வண்ணமயமான அலகு காவடிகளை ஏந்தி ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

சீர்காழியின் முக்கிய வீதிகளான நான்கு ராஜவீதிகள் வழியாக இந்த ஊர்வலம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. "ஓம் சக்தி, பராசக்தி" என்ற பக்தர்களின் கோஷங்கள் விண்ணைப் பிளக்க, மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது.

பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

பக்தர்கள் கொண்டு வந்த புனித பால் மற்றும் பல்வேறு திரவியங்களைக் கொண்டு அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர், பத்ரகாளியம்மன் விசேஷ மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அப்போது மகா தீபாராதனை நடைபெற்றபோது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனைத் தரிசித்து அருள் பெற்றனர். 

பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டம்

விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதிக்கு முன்னதாக, மாலையில் பச்சைக்காளி மற்றும் பவளக்காளி திருவீதி உலா நடைபெற்றது. ஆக்ரோஷமான முகபாவனைகளுடன், தாரை தப்பட்டை முழங்க வீதிகளில் ஆடிக்கொண்டு வந்த இந்த திருவீதி உலா, காண்போரைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது. கிராமியக் கலைகளின் சங்கமமாக அமைந்த இந்த நிகழ்வு, விழாவிற்கு மேலும் மெருகூட்டியது.

பக்திப் பெருக்குடன் நடைபெற்ற தீமிதி விழா

மாலையில் சூரியன் மறையும் வேளையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா தொடங்கியது. சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோயிலில் இருந்து காப்பு கட்டி விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஊர்வலமாகப் பத்ரகாளியம்மன் கோயில் முன்பாகத் திரண்டனர். கோயில் முன்பாகப் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில், அக்னி பிழம்புகள் தணியாத நிலையில் இருந்தன.

முதலில் சக்திகரத்துடன் கோவில் பூசாரி தீக்குண்டத்தில் இறங்கி வழிகாட்டினார். அவரைத் தொடர்ந்து, குழந்தைகளுடன் பல தாய்மார்களும், இளைஞர்களும், முதியவர்களும் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி உலா

தீமிதித் திருவிழா நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இரவு ஸ்ரீ பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தபோது, வீடுகள் தோறும் மக்கள் தேங்காய் உடைத்து கற்பூர ஆராதனை காட்டி வழிபட்டனர்.

பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அன்னதான உள்ளிட்ட திருவிழா சார்ந்த பணிகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் நேதாஜி இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் தலைவர் ரமேஷ் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர். பழமை வாய்ந்த சீர்காழி பத்ரகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா, இப்பகுதி மக்களின் ஒற்றுமையையும் பக்தியையும் பறைசாற்றும் விதமாக இனிதே நிறைவடைந்தது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
கோடியக்கரை சரணாலயத்திற்கு வரப்போகும் புதிய மாற்றங்கள்: நாகை ஆட்சியரின் ‘ஸ்பாட் விசிட்’ பின்னணி!
கோடியக்கரை சரணாலயத்திற்கு வரப்போகும் புதிய மாற்றங்கள்: நாகை ஆட்சியரின் ‘ஸ்பாட் விசிட்’ பின்னணி!
வலைக்குள் சிக்கிய விசித்திர உருவம்... கடல் நீரை ஊற்றிப் பார்த்த மீனவர்களுக்குக் காத்திருந்த மெய்சிலிர்க்கும் காட்சி!
வலைக்குள் சிக்கிய விசித்திர உருவம்... கடல் நீரை ஊற்றிப் பார்த்த மீனவர்களுக்குக் காத்திருந்த மெய்சிலிர்க்கும் காட்சி!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
Kia Hybrid: முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
Cancer Risk: அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
Hero VIDA VX2 Plus: புதுசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்
துசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
Embed widget