மேலும் அறிய

இரண்டுமாத காலம் மீனவர்களுக்கு திண்டாட்டம்... வளர்ப்பு மீன் வியாபாரிகளுக்கு கொண்டாட்டம்...ஏன் தெரியுமா?

இந்தாண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் வரும் 15-ம் தேதி தொடங்குகி, 61 நாட்கள் இந்த அமலில் இருக்க உள்ளதால் அடுத்த வாரம் முதல் மீன்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்களுக்கு மீன்பிடி தடைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது.

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் விதிகள் 2020-இன் படி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரையிலும் மீனவா்கள் இழுவலை விசைப்படகுகள் அல்லது தூண்டில், வழிவலை விசைப்படகினை பயன்படுத்தி மீன்பிடிப்பது 61 நாள்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் மீன்பிடி தடைகால அமலுக்கு முன்னர் கடலுக்கு சென்ற மீன்பிடி விசைப்படகுகள் வரும் 14-04-2024 இரவு 12.00 மணிக்குள் கட்டாயம் கரைக்கு திரும்ப அனைத்து படகுகளுக்கும் அறிவுறுத்திடவும், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீன்பிடி படகுகளின் உரிமையாளர்கள் மூலம் அப்படகில் உள்ள மீனவர்களுக்கு VHF / SATATELITE PHONE பிற தகவல்கள் தொடர்பு சாதனங்கள் மூலம் உடனடியாக கரைக்கு திரும்பிட தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தெரிவித்துள்ளார்.

61 நாட்கள் மீன்பிடி தடை 

தமிழ்நாடில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் வரும் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி, வரும் ஜுன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமல் படுத்தப்பட உள்ளது. இந்த தடை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விசைப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல், மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நிறுத்தி வைக்கப்படும். மேலும் இந்த தடை காலத்தை பயன்படுத்தி அதனை ஆக்கப்பூர்வமானதாக மாற்றும் வண்ணம் மீனவர்கள் தங்களது படகுகள், மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியை மேற்கொள்வர்.

மீன்களின் விலை அதிகரிப்பு 

மீன்பிடி தடைக் காலத்தின்போது மீன்பிடித் தொழில் முற்றிலுமாக தடைப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்கு தலா 8 ஆயிரம் ரூபாய் வீதம் மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் இந்த மீன்பிடித்தடை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மாதங்களுக்கு மீன்கள் மற்றும் இறைச்சியின் விலை அதிகரிக்கும். குறிப்பாக கடல் மீன்பற்றா குறையை சமாளிக்க மாற்றாக மீன் பிரியர்கள் வளர்ப்பு மீன்களை நாடி செல்வர். இதன் காரணமாக வழக்கதை விட கூடுதலாக விலைக்கு இந்த மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது. இதற்கிடையே, இந்த மீன்பிடித் தடைக் காலத்தை வரும் அக்டோபர் மாதத்துக்கு மாற்ற வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர்களின் நீண்ட கால கோரிக்கை 

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் பருவ மழை தொடங்கும் நேரத்தில்தான் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் இதற்கு மாறாக மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. எனவே, தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன்பிடித் தடைக்காலத்தை அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கை நீண்ட காலமான கோரிக்கை என்றும், தற்போது மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்பட்டும் வரும் நிவராணத் தொகையை 15 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

துர்நாற்றம்... கொசுத்தொல்லை... நோய் பயம்! அதிகாரிகளின் அலட்சியத்தால் சீரழியும் சுகாதாரம்!
துர்நாற்றம்... கொசுத்தொல்லை... நோய் பயம்! அதிகாரிகளின் அலட்சியத்தால் சீரழியும் சுகாதாரம்!
ரஷ்யா-உக்ரைன் எல்லையில் சிக்கிய தமிழக இளைஞர்கள்: வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்கள் கவனத்திற்கு!
ரஷ்யா-உக்ரைன் எல்லையில் சிக்கிய தமிழக இளைஞர்கள்: வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்கள் கவனத்திற்கு!
பொதுமக்கள் கவனத்திற்கு..! இனி கழிவுகளைத் தரம் பிரிக்காவிட்டால் சேகரிக்கப்பட மாட்டாது - ஆணையர் எச்சரிக்கை!
பொதுமக்கள் கவனத்திற்கு..! இனி கழிவுகளைத் தரம் பிரிக்காவிட்டால் சேகரிக்கப்பட மாட்டாது - ஆணையர் எச்சரிக்கை!
மாதச் சம்பளம் ₹58,500 வரை! நாகப்பட்டினம் மாவட்ட சிறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
மாதச் சம்பளம் ₹58,500 வரை! நாகப்பட்டினம் மாவட்ட சிறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Embed widget