மேலும் அறிய

மயிலாடுதுறை மீனவர்களே அலர்ட்! ஜூன் 11 அன்று கடலுக்குப் போகாம கரையில் நிக்க வேண்டிய கட்டாயம்.. ஏன் தெரியுமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாட்டுப்படகுகள் நேரடித் தள ஆய்வு செய்யப்பட உள்ள நிலையில், இதில் பங்கேற்காத படகுகளுக்கு மானிய டீசல் நிறுத்தப்பட்டு, பதிவுச் சான்று ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத அனைத்து வகை நாட்டுப்படகுகளும் வரும் ஜூன் 11-ஆம் தேதி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளால் நேரடித் தள ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. இந்த ஆய்வில் பங்கேற்காத படகுகளுக்கு அரசு வழங்கும் மானிய டீசல் விநியோகம் உடனடியாக நிறுத்தப்படும் என்றும், உரிய விசாரணைக்குப் பின் படகின் பதிவுச் சான்று ரத்து செய்யப்படும் என்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மீன்பிடித் தடைக்காலமும் ஆண்டு நேரடி ஆய்வும்

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், தமிழகத்தின் கிழக்குக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தைக் கணக்கில் கொண்டும், கடல் மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டும் ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

">

அதன்படி, நடப்பு 2026-ஆம் ஆண்டிற்குக் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கிய தடைக்காலம் வரும் ஜூன் 14-ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்தத் தடைக்காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகள் மூலமாகக் கடலில் மீன்பிடிப்பதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும் நாட்களைப் பயன்படுத்தி, மீன்பிடி கலன்களின் தரம் மற்றும் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்ய 'ஆண்டு நேரடித் தள ஆய்வு' (Physical Verification) நடத்தப்படுவது வழக்கமாகும்.

ஜூன் 11-ல் மயிலாடுதுறை நாட்டுப்படகுகள் தணிக்கை

அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான நாட்டுப் படகுகளையும் (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை உட்பட) ஒரே நாளில் நேரடியாக ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

வருகின்ற 11.06.2026 (வியாழக்கிழமை) அன்று, மயிலாடுதுறை மாவட்டக் கடலோரப் பகுதிகளில் உள்ள அனைத்து மீன்பிடித் தங்கு தளங்கள் மற்றும் கடற்கரைக் கிராமங்களில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்புக் குழுவினர் இந்த நேரடி ஆய்வினை மேற்கொள்ள உள்ளார்கள்.

இந்த ஆய்வின் போது, படகின் உறுதித் தன்மை, இயந்திரத்தின் குதிரைத் திறன் (Horsepower), படகின் நீள மற்றும் அகல அளவுகள் ஆகியவை அரசின் அதிகாரப்பூர்வப் பதிவுச் சான்றுடன் ஒப்பிட்டுத் துல்லியமாகச் சரிபார்க்கப்படும். இந்த ஆய்வின் அடிப்படையில் மட்டுமே வருங்காலத்தில் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் உள்ளிட்ட அரசின் இதர மானியத் திட்டங்கள் மீனவர்களுக்குத் தொடர்ந்து வழங்கப்படும்.

ஆய்வுக்கு வரும் படகுகளுக்கான முக்கிய விதிமுறைகள்

நாட்டுப்படகு உரிமையாளர்கள் தங்களது படகுகளை ஆய்வு நாளான ஜூன் 11 அன்று தங்களது தங்கு தளங்களிலேயே நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், ஆய்வுக்கு உட்படுத்தப்படும் படகுகள் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது:

வர்ணம் மற்றும் பதிவெண்: அரசு நிர்ணயித்துள்ளபடி மீன்பிடிப் படகுகளுக்கு உரிய வண்ணக் குறியீட்டில் (Color Coding) வர்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும். மேலும், படகின் பதிவு எண் தெளிவாகத் தெரியும் வண்ணம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

அசல் ஆவணங்கள்: ஆய்வு நேரத்தில் படகு உரிமையாளர்கள் தங்களது படகின் பதிவுச் சான்றிதழ் (RC), நடப்பில் உள்ள மீன்பிடி உரிமச் சான்றிதழ் (Fishing License) மற்றும் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் அட்டை (Diesel Passbook) ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பாதுகாப்பு உபகரணங்கள்: மீன்வளத்துறை மூலம் வழங்கப்பட்ட தொலைத்தொடர்பு கருவிகள் (Wireless Wireless / VHF Sets) மற்றும் உயிர் காக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் (Life Jackets) ஆகியவற்றை ஆய்வுக் குழுவினரிடம் கட்டாயம் காண்பிக்க வேண்டும்.

அலட்சியம் காட்டினால் பாயும் அதிரடி நடவடிக்கை!

அரசின் இந்த நேரடி ஆய்வில் கலந்துகொள்ளாமல் அலட்சியம் காட்டும் படகு உரிமையாளர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

கலெக்டரின் கடுமையான எச்சரிக்கை: "விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட மானிய டீசல் வாங்கும் நாட்டுப் படகுகள், ஜூன் 11 அன்று தங்களை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை எனில், அப்படகுகளுக்கான மானிய டீசல் விநியோகம் உடனடியாக நிறுத்தம் செய்யப்படும். மேலும், அப்படகுகள் தற்போதைய இயக்கத்தில் இல்லாததாகக் கருதப்பட்டு, உரிய சட்ட விசாரணைக்குப் பிறகு அவற்றின் பதிவுச் சான்றிதழ்கள் (Registration) முழுமையாக ரத்து செய்யப்படும்."

மேலும், அறிவிக்கப்பட்ட ஆய்வு நாளன்று (ஜூன் 11) தங்களது படகினை ஆய்வுக்கு உட்படுத்தாமல் தவறிவிட்டு, பின்னொரு நாளில் தங்களுக்குச் சாதகமான தேதியில் படகை ஆய்வு செய்யக் கோரும் எந்தவொரு படகு உரிமையாளரின் தனிப்பட்ட கோரிக்கைகளும் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு உரிமையாளர்கள் அனைவரும் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது மீன்பிடி கலன்களைத் தவறாமல் ஆய்வுக்கு உட்படுத்தி, அரசின் சலுகைகளைத் தடையின்றிப் பெற மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

அக்னி, சூரியன், சந்திரன்... மூன்று தீர்த்தங்களிலும் தீர்த்தவாரி: திருவெண்காட்டில் நடந்த ஆன்மீக அதிசயம்!
அக்னி, சூரியன், சந்திரன்... மூன்று தீர்த்தங்களிலும் தீர்த்தவாரி: திருவெண்காட்டில் நடந்த ஆன்மீக அதிசயம்!
டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதி செய்தி! சிபில் ஸ்கோர் பார்க்காமல் கடன் வழங்கும் இந்தியன் வங்கி!
டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதி செய்தி! சிபில் ஸ்கோர் பார்க்காமல் கடன் வழங்கும் இந்தியன் வங்கி!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
10 நாட்கள்... 35 மாற்றுத்திறனாளிகள்... மாற்றத்தை நோக்கிப் பாயும் மயிலாடுதுறை! முழு விபரம் உள்ளே!
10 நாட்கள்... 35 மாற்றுத்திறனாளிகள்...மாற்றத்தை நோக்கிப் பாயும் மயிலாடுதுறை! முழு விபரம் உள்ளே!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலாயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலாயா’ பெயருக்கான காரணம் என்ன?
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
Cheapest Diesel SUV: நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
Embed widget