மேலும் அறிய

அழிந்து போன வாழ்வாதாரத்திற்காக போராடிய விவசாயிகள்... தயவு தாட்சண்யம் இன்றி செயல்பட்ட போலீஸ்... கலங்கும் விவசாயிகள்

கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என கூறி தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என கூறி தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி, குண்டு கட்டாக தூக்கி கைது செய்த காவல்துறையினர் மீது குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தில் ஒரு லட்சத்து 79 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அறுவடை துவங்கிய நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பரவலாக பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் அரசு கணக்கெடுப்பின்படி சுமார் 65 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. மேலும் ஊடுபயிராக பயிரிடப்பட்டிருந்த நெல் மற்றும் பச்சைபயிறு வகைகள் முற்றிலும் சேதம் அடைந்தன. 

அழிந்து போன வாழ்வாதாரத்திற்காக போராடிய விவசாயிகள்... தயவு தாட்சண்யம் இன்றி செயல்பட்ட போலீஸ்... கலங்கும் விவசாயிகள்

அமைச்சரின் சொந்த மாவட்டத்திற்கு முழுமையாக வெள்ள நிவாரணம்

இதற்கு மார்ச் மாதத்திற்குள் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மிகவும் சொற்ப அளவிலான இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான கடலூர் மாவட்டத்திற்கு முழுமையாக வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் இன்று டெல்டா பாசனதாரர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் சங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இனி திருப்பதிக்கு அடிக்கடி போகலாம்! காட்பாடி-திருப்பதி இடையே இரட்டை ரயில் பாதை- மத்திய அரசு ஒப்புதல்!

அழிந்து போன வாழ்வாதாரத்திற்காக போராடிய விவசாயிகள்... தயவு தாட்சண்யம் இன்றி செயல்பட்ட போலீஸ்... கலங்கும் விவசாயிகள்

கைது செய்யப்பட்ட விவசாயிகள் 

அப்போது மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர், மைக் மூலம் கண்டன கோஷங்கள் எழுப்பிய விவசாயிகளிடம் இருந்து அவர்களை பேச முடியாதவாறு முதலில் மைக்கை பிடுங்கினர். தொடர்ந்து விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் துரைராஜ், டெல்டா பாசன விவசாய சங்க மாவட்ட தலைவர் அன்பழகன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாவட்ட தலைவர் இயற்கை விவசாயம் ராமலிங்கம் உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்களை கைது செய்தனர். கைது செய்வதற்கு விவசாயிகள் முன் வராத நிலையில் அவர்களை குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றினார்.

அழிந்து போன வாழ்வாதாரத்திற்காக போராடிய விவசாயிகள்... தயவு தாட்சண்யம் இன்றி செயல்பட்ட போலீஸ்... கலங்கும் விவசாயிகள்

காவல்துறையினர் மீது விவசாயிகள் 

அப்பொழுது நிதிக்காக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்மூடி தனமாக நடந்துகொண்டு தங்களை தாக்கியதாக விவசாயிகள் குற்றச்சாட்டை தெரிவித்தனர். மேலும் தங்கள் உடைகள் கிழிக்கப் பட்டதாகவும், கை,கால்களில் காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட விவசாயிகளை வெளியே கொண்டு செல்லாத படி காவல்துறையினரின் வாகனங்களை சுற்றி விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டெல்டாவை சேர்ந்தவர் என்று கூறிக் கொள்ளும் முதலமைச்சர், காவல்துறையை ஏவி விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது என்று விவசாயிகள் தங்களின் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
Embed widget