மேலும் அறிய

மயிலாடுதுறை விவசாயிகளுக்கு குட் நியூஸ்! உங்கள் குறைகளை ஆட்சியரிடம் சொல்ல நேர வந்தாச்சு - எங்கே, எப்போது?

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 27 -ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற மே 27-ஆம் தேதி புதன்கிழமை நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்துக்கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் விவசாயம் சார்ந்த துறை சார்ந்த அதிகாரிகளுடன் விவசாயிகளும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை அரசிடம் தெரிவித்து அதற்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

மே 26 -ம் தேதி நடைபெறும் கூட்டம் 

அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை மறுநாள் மே 27 -ம் தேதி புதன்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தின் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ காந்த் தலைமையில் 27.05.2026 புதன்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்துகொள்ளும் துறைகள்

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று

* வேளாண்மை

* நீர்ப்பாசனம்

* கால்நடை

* கூட்டுறவு

* மின்சாரம்

* வேளாண்மை

* பொறியியல்துறை

* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்

* தோட்டக்கலை துறை

ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம். 

விவசாயிகளுக்கு அனுமதி 

மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேச விரும்பும் விவசாய சங்க தலைவர்கள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் அனைவரும் கூட்டம் நடைபெறும் நாள் அன்று காலை 9.30 மணி முதல் பதிவு மேற்கொண்டு டோக்கன் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் இருந்து சங்க தலைவர்களும், தனிப்பட்ட விவசாயிகளும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை பேசலாம் என கூறப்பட்டுள்ளது.

பிரதான தொழிலான விவசாயம் 

டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாவட்டத்தில் விவசாயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நிலத்தடி நீரை கொண்டு இப்பகுதியில் அதிக விவசாயம் நடைபெறுவதால் சம்பா மற்றும் குறுவை சாகுபடி பெருமளவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் நெல் மற்றும் இன்றி மாற்று பயிராக வாழை, கரும்பு, மஞ்சள், பருத்தி, மற்றும் காய்கறி வகைகளும் பயிரிடப்பட்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயத்தை தீவிரமாக செய்து வருகின்றன. இந்த நிலையில் அரசு அறிவிக்கும் திட்டங்கள் உள்ளிட்ட பயன்களை முழுமையாக பெறுவதற்கும் தங்கள் குறைகளை அரசுக்கு தெரிவிப்பதற்கும் இந்த விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இவ்மாவட்டத்தில் பார்க்கப்படுகிறது. மேலே தற்போது தமிழகத்தில் புதிய ஆட்சியர் அமைந்துள்ள நிலையில் இந்த கூட்டம் விவசாயிகளிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

"காவிரி பொங்கி வரணும்!" - கண்ணீரும் பக்தியுமாக ஆடிப்பெருக்கை கொண்டாடிய மயிலாடுதுறை மக்கள்.
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget