மேலும் அறிய

குறைகள் தீர நேரம் வந்தாச்சு.... மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் - எப்போ தெரியுமா..?

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிப்ரவரி 27 -ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கலந்துக்கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

ஒவ்வொரு மாதத்தின் கடைசி வாரத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் விவசாயம் சார்ந்த துறை சார்ந்த அதிகாரிகளுடன் விவசாயிகளும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை அரசிடம் தெரிவித்து அதற்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

பிப் 27 -ம் தேதி நடைபெறும் கூட்டம் 

அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருகின்ற பிப்ரவரி 27 -ம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தின் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் 27.02.2025 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kaliammal Quits NTK: நாம் தமிழருக்கு குட் பை! கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்! அடுத்து எந்த கட்சி?

கூட்டத்தில் கலந்துகொள்ளும் துறைகள்

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்று வேளாண்மை, நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலை துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம். 

விவசாயிகளுக்கு அனுமதி 

மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேச விரும்பும் விவசாய சங்க தலைவர்கள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் அனைவரும் கூட்டம் நடைபெறும் நாள் அன்று காலை 9.30 மணி முதல் பதிவு மேற்கொண்டு டோக்கன் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் இருந்து சங்க தலைவர்களும், தனிப்பட்ட விவசாயிகளும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை பேசலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்தாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1.94 லட்சம் சம்பளம்; தேர்வில் 0 பேர் தேர்ச்சி- ஒருவருக்குக் கூட தகுதியில்லையா? வெளியான அதிர்ச்சித் தகவல்!

பிரதான தொழிலான விவசாயம் 

டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாவட்டத்தில் விவசாயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நிலத்தடி நீரை கொண்டு இப்பகுதியில் அதிக விவசாயம் நடைபெறுவதால் சம்பா மற்றும் குறுவை சாகுபடி பெருமளவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் நெல் மற்றும் இன்றி மாற்று பயிராக வாழை, கரும்பு, மஞ்சள், பருத்தி, மற்றும் காய்கறி வகைகளும் பயிரிடப்பட்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயத்தை தீவிரமாக செய்து வருகின்றன. இந்த நிலையில் அரசு அறிவிக்கும் திட்டங்கள் உள்ளிட்ட பயன்களை முழுமையாக பெறுவதற்கும் தங்கள் குறைகளை அரசுக்கு தெரிவிப்பதற்கும் இந்த விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இவ்மாவட்டத்தில் பார்க்கப்படுகிறது. 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

இனிப்புகளுடன் ஹெல்மெட் விழிப்புணர்வு: மயிலாடுதுறை காவல் நிலையத்தில் நெகிழ்ச்சியான 80-வது சுதந்திர தின விழா!
இனிப்புகளுடன் ஹெல்மெட் விழிப்புணர்வு: மயிலாடுதுறை காவல் நிலையத்தில் நெகிழ்ச்சியான 80-வது சுதந்திர தின விழா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?
பெண்களுக்குச் சூப்பர் வாய்ப்பு! அரசு நலத்திட்டங்களைப் பெற ஆன்லைனில் உடனே பதிவு செய்யுங்கள்!
பெண்களுக்குச் சூப்பர் வாய்ப்பு! அரசு நலத்திட்டங்களைப் பெற ஆன்லைனில் உடனே பதிவு செய்யுங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Embed widget