மேலும் அறிய

காங்கிரஸ் ஓட்டை வாங்கியா ஜெயிச்ச? திமுக ஓட்டில்தான ஜெயிச்ச - மயிலாடுதுறையில் கடுப்பான நகராட்சி சேர்மன்

மயிலாடுதுறையில் அடிக்கல் நாட்டு விழா திமுக நகராட்சி தலைவருக்கு அழைப்பு விடுக்காததால் ஆத்திரமடைந்த நகராட்சி சேர்மன்  எம்எல்ஏவிடம் சரமாரியாக கேள்வி கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம்  மயிலாடுதுறை அருகே ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் கல்லூரியின் பின்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கல்லூரிக்கு தேவையான நூலக கட்டிடம்  4.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் இரண்டு அடுக்குமாடியில் கட்ட திட்டமிடப்பட்டு, அதன் அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.  இந்நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்து இறங்கிய திமுக நகர செயலாளரும், நகராட்சி தலைவருமான குண்டாமணி என்கிற செல்வராஜ், நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் அடிக்கல் நாட்டியதைக் கண்டித்து கட்டட ஒப்பந்தக்காரர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


காங்கிரஸ் ஓட்டை வாங்கியா ஜெயிச்ச? திமுக ஓட்டில்தான ஜெயிச்ச - மயிலாடுதுறையில் கடுப்பான நகராட்சி சேர்மன்

அப்போது அவர் கூறுகையில், இந்த இடத்திற்கு வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன், எப்படி கட்டிடம் கட்டுவீர்கள் என பார்க்கின்றேன்? உங்கள் சௌரியத்திற்கு நினைத்துக்கொண்டு இருக்கிறதுக்கு நாங்கள் என்னனு நெனச்சியா?  எம்பி கிட்ட சொன்னீர்களா? எம்பி என்ன செத்தா போயிட்டாரு? சேர்மேன் கிட்ட சொன்னீர்களா? என்ன அர்த்தத்தில் செய்றீங்க? யார கேட்டு செய்றீங்க? தப்பாபண்றீங்க எம்பி என்ன செத்தா போயிட்டாரு தேதி அறிவிச்சீட்டாங்களா? இதையெல்லாம் கேட்டா நான் பொல்லாதவனா? எந்த அடிப்படையில் செய்றீங்க நீங்க தப்பா பண்றீங்க நகராட்சியில் பாதி இடம் தான் தீர்மானம் வச்சிருக்கு, பாதி இடத்திற்கு தீர்மானம் இல்லை என்றால் வேற மாதிரி செஞ்சிடுவேன். தலைய தலைய ஆட்டுனா என்ன அர்த்தம் சொல்றது இல்லையா. யார்கிட்டயும் சொல்லாமல் திருட்டுத்தனமா பண்றீங்களா? தலைவர் அறிவித்த திட்டம் தானே முதலமைச்சர் தானே (ஃபண்ட்) நிதி கொடுக்கிறார்.

காங்கிரஸ் ஓட்டை வாங்கியா ஜெயிச்ச? திமுக ஓட்டில்தான ஜெயிச்ச... மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய மயிலாடுதுறை நகராட்சி சேர்மன்...! pic.twitter.com/a5vDV7nyTz

— JAGANNATHAN (@Jaganathan_JPM) March 6, 2024

">

நாலு பேரு கிட்ட சொல்ற அதனால உனக்கு என்ன சங்கடம்? நீ ஒப்பந்தக்காரர் தானே மாவட்டத்திடன் சொன்ன அடுத்தபடியா யார் கிட்ட சொல்லணும் இன்ஜினியரிடம் கேட்டார். காலேஜ்ல பூஜைக்கு யார் யாருக்கெல்லாம் சொல்லணும் சொல்லிறேன்னு சொன்னாங்க என்று இன்ஜினியர் கூறினார். அதற்கு நகர மன்ற தலைவர் ப்ரோட்டகால் முறையில் பண்ணிட்டீங்களா? எல்லா எம்எல்ஏவுடையே முடிஞ்சிடுச்சா? எம்எல்ஏ சொல்ல மாட்டாருங்க எம்எல்ஏ இன்னைக்கு இருந்துட்டு  போயிடுவாருங்க எம்எல்ஏ காங்கிரஸ் ஓட்டுலியா ஜெயிச்சாரு? திமுக ஓட்டு வாங்கி தானே ஜெயிச்சாரு எம்எல்ஏவுக்கு என்ன? திமுககாரன் யாருமே கிடையாது திமுக காரன் எல்லாம் சின்டு புடிச்சிட்டு நிக்கணும் அடிச்சிட்டு நிக்கணும்? என இன்ஜினியரிடம் ஆவேசமாக பேசினார்.


காங்கிரஸ் ஓட்டை வாங்கியா ஜெயிச்ச? திமுக ஓட்டில்தான ஜெயிச்ச - மயிலாடுதுறையில் கடுப்பான நகராட்சி சேர்மன்

இதையடுத்து அங்கிருந்து விலகிச் சென்று காரில் அமர்ந்த எம்எல்ஏ ராஜகுமார், காரில் அமர்ந்தபடி நகராட்சி தலைவரை சமரசப்படுத்த முயன்றார். இதனால், கோபமடைந்த நகராட்சி தலைவர் குண்டாமணி செல்வராஜ், காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமாரிடம் சென்று இன்னும் நிறைய பேசுவேன் நீ வந்தது தப்பு. நீ எம்எல்ஏ தானே நீ வந்தது தப்பு எப்படி வந்த நான் ஒரு சேர்மன் இருக்கேனே உன்னை ஜெயிக்க வைத்தது யார் (மாயவரம்) மயிலாடுதுறையில் உனக்கு ஒருத்தன் ஓட்டு கேட்டானா? உன்ன நான் தான் ஜெயிக்க வச்சேன். வயிற்றெரிச்சல்ல இருக்கேன் உன் காரையே உள்ள விடமாட்டேன். ஏன் ரத்தம் எல்லாம் கொதிக்குது உன் எண்ணத்தில் இடி உழுவோ  திமுக காரங்களா அடிச்சிட்டு நிக்கணும் நீ மட்டும் காரில் சொகுசாக போக வேண்டுமா? சண்டை போட்டு டிவில வரணும் அதை பாக்கணும்.


காங்கிரஸ் ஓட்டை வாங்கியா ஜெயிச்ச? திமுக ஓட்டில்தான ஜெயிச்ச - மயிலாடுதுறையில் கடுப்பான நகராட்சி சேர்மன்

இது ஒரு தலைவர் நிகழ்ச்சி தானே எல்லார்கிட்டயும் சொல்லிட்டு செஞ்சா என்ன?  எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதனைத் தொடர்ந்து டபீர்தெருவில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருவரும் இணைந்து விலையில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி கலந்துகொண்டு ஒன்றாக சைக்கிள்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஒரே முகாமில் பல சலுகைகள்: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரின் சூப்பர் பிளான்!
ஒரே முகாமில் பல சலுகைகள்: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரின் சூப்பர் பிளான்!
ஒரே நாளில் 500+ பேருக்கு வேலை! ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!
ஒரே நாளில் 500+ பேருக்கு வேலை! ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!
Mayiladuthurai Power Shutdown (23.07.2026) : இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு பட்டியல் இதோ..!
Mayiladuthurai Power Shutdown (23.07.2026) : இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? முழு பட்டியல் இதோ..!
ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்
ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Hyundai Creta: SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
Embed widget