மேலும் அறிய

மானிய உதவியுடன் வேளாண் தொழிலைத் தொடங்க அரிய வாய்ப்பு: 25% முதல் 35% வரை மானியம்; வட்டி மானியமும் உண்டு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ”100 மதிப்புக்கூட்டும் அலகுகள்” திட்டத்தில் மானிய உதவியுடன் வேளாண் தொழிலைத் தொடங்க விவசாயிகள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை: விவசாயிகளின் வருவாயைப் பெருக்கவும், வேளாண் விளைபொருட்களுக்கு அதிக லாபம் ஈட்டித் தரவும் வழிவகுக்கும் வகையில், தமிழக முதலமைச்சர் மாநிலம் முழுவதும் ”100 மதிப்புக்கூட்டும் அலகுகள்” துவங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், விவசாய விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய விரும்பும் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

திட்டத்தின் முக்கிய நோக்கம்

வேளாண் விளைப்பொருட்களை அப்படியே விற்பனை செய்வதைவிட, அவற்றைச் சுத்திகரித்து, பதப்படுத்தி, அல்லது வேறு வடிவங்களில் மாற்றுவதன் மூலம் (இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை மதிப்புக்கூட்டல்) உற்பத்தியாளருக்கு அதிக லாபம் கிடைப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் பொருளாதார ரீதியாகப் பலமடைய முடியும். இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விரும்பும் நபர்கள் அல்லது நிறுவனங்கள், வேளாண் அல்லது தோட்டக்கலை விளைப்பொருட்களின் இரண்டாம் நிலை அல்லது மூன்றாம் நிலை மதிப்புக்கூட்டும் தொழில்களைத் தேர்வு செய்யலாம்.

அள்ளி வழங்கும் மானிய சலுகைகள்

தமிழக அரசின் இந்தத் திட்டத்தில் தொழில்முனைவோருக்குத் தாராளமான மானியம் மற்றும் வட்டிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

  • பொதுப் பிரிவினருக்கு திட்ட மதிப்பில் 25% மானியம் 
  • சிறப்புப் பிரிவினர் (பெண்கள், தொழிலில் பின்தங்கிய வட்டாரத்தில் உள்ளோர், ஆதிதிராவிடர்/பழங்குடியினர்) திட்ட மதிப்பில் 35% மானியம் (பொது மானியத்துடன் கூடுதலாக 10%) மானியம் வழங்கப்படும்

வரம்பு: பயனாளிகளுக்கு அதிகபட்சமாக, அவர்களின் திட்ட மதிப்பீட்டில் 25% அல்லது 35% மானியம் அல்லது ரூ.1.5 கோடி இவற்றில் எது குறைவானதோ அந்தத் தொகை, வங்கி கடனில் பின்னேற்பு மானியமாக இரண்டு தவணைகளில் வழங்கப்படும். இதில், முதல் தவணையாக 60% தொகையும், மீதமுள்ள 40% தொகையும் வழங்கப்படும்.

வட்டி மானியமும் கடனுதவியும்

தொழில் துவங்க விரும்புவோர், தங்கள் வணிகத் திட்ட மதிப்பில் 5% தொகையினை சொந்தப் பங்களிப்பாக அளிக்க வேண்டும்.

* மேலும், இத்திட்டத்தில் 5% வட்டி மானியம் தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை வழங்கப்படும்.

* தொழில் துவங்க விரும்புவோர் உரிய வணிகத் திட்ட அறிக்கையுடன் வங்கியைத் தொடர்புகொண்டு ஒப்புதல் பெற்று, AIF (வேளாண் உள்கட்டமைப்பு நிதி) திட்டத்தின் கீழ் பதிவு செய்து, 9% வட்டிக்குக் கடன் பெற வேண்டும்.

விண்ணப்பிக்கும் தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்

* உரிமை நிலை: விண்ணப்பதாரருக்கு நிறுவனத்தின் உரிமை இருக்க வேண்டும். இது தனியுரிமை, கூட்டாண்மை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் அல்லது கூட்டுறவு நிறுவனமாக இருக்கலாம்.

* ஒருமுறை மட்டுமே: ஒரு நபர்/நிறுவனம்/குடும்பம் இத்திட்டத்தில் ஒருமுறை மட்டுமே மானியம் பெற இயலும்.

* தேவையான ஆவணங்கள்: விண்ணப்பங்கள் முழுமையான திட்ட அறிக்கை (Detailed Project Report) மற்றும் வங்கி ஒப்புதல் கடிதம் / வங்கி பரிந்துரை, மற்றும் இதர விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் முகவரி

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மயிலாடுதுறை மாவட்ட தொழில்முனைவோர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் https://www.agrimark.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, அதை ஆணையர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், கிண்டி, சென்னை-32 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

சென்னையிலிருந்து சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும்.

உள்ளூர் அளவில் திட்டங்கள் குறித்த மேலதிகத் தகவல் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். வேளாண்மைத் துறையில் தொழில்முனைவோராக வளர விரும்பும் அனைத்துத் தகுதி வாய்ந்த நபர்களும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, லாபகரமான மதிப்புக்கூட்டும் அலகுகளைத் துவங்கிப் பயனடையுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு; 12 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை- அமித்ஷா தலைமையில் அவசரக்கூட்டம், உறுதியளித்த ராஜ்நாத்!
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு; 12 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை- அமித்ஷா தலைமையில் அவசரக்கூட்டம், உறுதியளித்த ராஜ்நாத்!
TN weatherman: அடுத்தடுத்து வருகிறதா புதிய புயல் சின்னம்.! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமா.? வெதர்மேன் சொல்லுவது என்ன.?
அடுத்தடுத்து வருகிறதா புதிய புயல் சின்னம்.! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமா.? வெதர்மேன் சொல்லுவது என்ன.?
Redfort Blast: டெல்லி கார் வெடிப்பு - அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? சிக்கும் டாக்டர்கள் - ஷாக்கிங் அப்டேட்ஸ்
Redfort Blast: டெல்லி கார் வெடிப்பு - அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? சிக்கும் டாக்டர்கள் - ஷாக்கிங் அப்டேட்ஸ்
Sabarimala Malai: ஐயப்ப பக்தர்களே! சபரிமலைக்கு மாலை எப்போது போடலாம்? எந்த நேரத்தில் அணியலாம்?
Sabarimala Malai: ஐயப்ப பக்தர்களே! சபரிமலைக்கு மாலை எப்போது போடலாம்? எந்த நேரத்தில் அணியலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Delhi Car Blast | செங்கோட்டை அருகேவெடித்து சிதறிய கார்பதற்றத்தில் டெல்லி!பரபரப்பு காட்சிகள்
Christmas Cake Making | வந்தாச்சு கிறிஸ்துமஸ்!தனியார் சொகுசு ஹோட்டலில் தயாராகும் 200 கிலோ CAKE
90 KM சைக்கிளிங், 21 KM ரன்னிங்! அசர வைத்த அண்ணாமலை! பூரித்து பாராட்டிய மோடி
சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு; 12 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை- அமித்ஷா தலைமையில் அவசரக்கூட்டம், உறுதியளித்த ராஜ்நாத்!
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு; 12 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை- அமித்ஷா தலைமையில் அவசரக்கூட்டம், உறுதியளித்த ராஜ்நாத்!
TN weatherman: அடுத்தடுத்து வருகிறதா புதிய புயல் சின்னம்.! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமா.? வெதர்மேன் சொல்லுவது என்ன.?
அடுத்தடுத்து வருகிறதா புதிய புயல் சின்னம்.! தமிழகத்தில் மழை வெளுத்து வாங்குமா.? வெதர்மேன் சொல்லுவது என்ன.?
Redfort Blast: டெல்லி கார் வெடிப்பு - அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? சிக்கும் டாக்டர்கள் - ஷாக்கிங் அப்டேட்ஸ்
Redfort Blast: டெல்லி கார் வெடிப்பு - அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? சிக்கும் டாக்டர்கள் - ஷாக்கிங் அப்டேட்ஸ்
Sabarimala Malai: ஐயப்ப பக்தர்களே! சபரிமலைக்கு மாலை எப்போது போடலாம்? எந்த நேரத்தில் அணியலாம்?
Sabarimala Malai: ஐயப்ப பக்தர்களே! சபரிமலைக்கு மாலை எப்போது போடலாம்? எந்த நேரத்தில் அணியலாம்?
Annamalai University: நீண்ட ஆண்டாக போராடும் அண்ணாமலை பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்கள்- கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தல்
Annamalai University: நீண்ட ஆண்டாக போராடும் அண்ணாமலை பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்கள்- கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தல்
மதுரையில் எங்கெல்லாம் நாளை (12.11.2025) மின்தடை... வந்துவிட்டது பைனல் லிஸ்ட் !
மதுரையில் எங்கெல்லாம் நாளை (12.11.2025) மின்தடை... வந்துவிட்டது பைனல் லிஸ்ட் !
Actor Dharmendra: தர்மேந்திரா உயிரிழந்ததாக பரவிய வதந்தி.. டென்ஷனான மகள் ஈஷா தியோல்!
Actor Dharmendra: தர்மேந்திரா உயிரிழந்ததாக பரவிய வதந்தி.. டென்ஷனான மகள் ஈஷா தியோல்!
Jananayagan: ஜனநாயகன் படம் இப்படித்தான் இருக்கும்.. வெளியான மாஸ் அப்டேட்!
Jananayagan: ஜனநாயகன் படம் இப்படித்தான் இருக்கும்.. வெளியான மாஸ் அப்டேட்!
Embed widget