மேலும் அறிய

"அப்போ சிறுத்தை! இப்போ முதலை" பீதியில் உறைந்த மயிலாடுதுறை மக்களுக்கு புது எச்சரிக்கை

சீர்காழி அருகே கூப்பிடுவான் உப்பனாற்றில் முதலை இருப்பதாக வனத்துறையினர் எச்சரிக்கை பலகை வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் கடந்த 02.04.2024 அன்று இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்க தானியங்கி சென்சார் கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கின்றனர். இருந்தபோதிலும் சிறுத்தையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிப்பது என்பது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது வருகிறது.

சிறுத்தை 

இந்நிலையில் கடந்த 2 தேதி முதல் சுமார் ஒரு வார காலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 22 கிலோமீட்டர் சுற்றளவில் சுற்றி திரிந்த நிலையில், ஏப்ரல் 7 -ம் தேதிக்கு பின்னர் மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் குறித்து எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லை. அதன் காரணமாக சிறுத்தையை தேடும் வேட்டையை திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனைக்குள் இருக்கும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன. அதனை அடுத்து அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டத்தில் தேடுதல் பணியில் தீவிரப்படுத்தினர். ஆனால் அங்கும் சிறுத்தை குறித்து  தகவல் கிடைக்கவில்லை.

GVM - Thalaivar 171: "தலைவர் 171 கதை எனக்கு தெரியும், லோகேஷ் சீக்ரெட் இதுதான்" - கௌதம் வாசுதேவ் மேனன் பகிர்வு!

முதலை நடமாட்டம் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்னலகுடி கிராமத்தில் கூப்பிடுவான் உப்பனாறு அமைந்துள்ளது. இந்த ஆற்றில் முதலை இருப்பதை அப்பகுதி விவசாயிகள் சிலர் பார்த்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் வந்த வனத்துறையினர் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் காளிகாவல்புரம் கூப்பிடுவான் உப்பனாறு தெற்கு பகுதியில் முதலை இருப்பதால் ஆற்றின் உட்பகுதியில் பொதுமக்கள் இறங்கவோ மற்றும் கரைப்பகுதியில் நடக்க கூடாது என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். 

VVPAT Case: விவிபேட் வழக்கு.. தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் எழுப்பிய 5 முக்கிய கேள்விகள்!

வனத்துறையினர் மீது புகார்

வனத்துறையினர் எச்சரிக்கை பலகையை பொதுமக்களின் பார்வையில் படாமல் காட்டுப் பகுதியில் வைத்துள்ளதாகவும், முதலையை கண்டுபிடிக்க விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கால்நடைகள் கோடை காலத்தில் தண்ணீர் குடிக்க ஆற்றில் இறங்கும் போது முதலையால் ஆபத்து உள்ளதால் மாவட்ட நிர்வாகம் முதலையை பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Cabinet Reshuffle : “தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம்” தேர்தலில் சரியாக வேலை செய்யாதவர்களுக்கு வயிற்றில் கரைகிறது புளி..!

சிறுத்தையைத் தொடர்ந்து முதலை

மயிலாடுதுறையில் கடந்த ஏப்ரல் 2 -ம் தேதி தென்பட்ட சிறுத்தையை இதுவரை பிடிபடாத நிலையில், தற்போது சிறுத்தை எங்கு உள்ளது என்ன ஆனது? என்று பொதுமக்களில் அச்சம் தீராத சூழலில், மக்களை மேலும் அச்சுறுத்தும் வகையில் தற்போது முதலை நடமாட்டம் என வனத்துறையினர் எச்சரிக்கை பலகை வைத்துள்ள நிகழ்வு மாவட்ட மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொள்ளிடம் அணைக்கரை பகுதியில் அதிகளவில் முதலைகள் உள்ளன. அவைகள் அவ்வபோது கொள்ளிடம் ஆற்றின் மூலம் மயிலாடுதுறையின் பல்வேறு பகுதிகளுக்கு வருவது என்பது தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிட்டதக்கது.

TN Weather Report: தேவையில்லாம வெளியே போகாதீங்க; சேலம்தான் 3வது இடம்: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Embed widget