மேலும் அறிய

GVM - Thalaivar 171: "தலைவர் 171 கதை எனக்கு தெரியும், லோகேஷ் சீக்ரெட் இதுதான்" - கௌதம் வாசுதேவ் மேனன் பகிர்வு!

Gautham Vasudev Menon: தலைவர் 171 படத்தின் கதை பற்றி தனக்கு தெரிந்த விஷத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படம் ரஜினிகாந்துக்கு நல்ல ஒரு கம் பேக் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். 

GVM - Thalaivar 171:

மோஸ்ட் வான்டட் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் 'தலைவர் 171' படத்தின் மூலம் முதல் முறையாக கூட்டணி சேர உள்ளனர். சன் பிச்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு 'கூலி' என தலைப்பிடப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் டைட்டில் டீசருடன் ‘தலைவர் 171’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. தற்போது ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். விரைவில் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

படம் குறித்த அப்டேட்களை ஒவ்வொன்றாக வெளியிடுவது லோகேஷ் கனகராஜ் ஸ்டைல். அந்த வகையில் மாநகரம் படத்தில் அவருடன் கூட்டணி சேர்ந்து திரைக்கதை மற்றும் வசனம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்ட சந்துரு அன்பழகன் 'கூலி' படத்தின் மூலம் மீண்டும் கூட்டணி சேர உள்ளனர் என்ற தகவல் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' படத்தின் வசனங்களை சந்துரு அன்பழகன் தான் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

GVM - Thalaivar 171:

'தலைவர் 171' குறித்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி ஒன்றில் கூறிய தகவல் ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. ரஜினி சாருடன் லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தின் கதை எனக்குத் தெரியும். எட்டு முதல் பத்து பேருக்கு அந்தப் படத்தின் கதை பற்றி தெரியும். கோவிட் சமயத்தில் ஒரு சில இயக்குநர்கள் வீடியோ கால் அல்லது ஜூம் மீட் மூலம் வாரத்திற்கு ஒரு முறை சந்தித்து பேசிக் கொள்வோம்.

லாக் டவுன் முடிந்த பிறகு அனைவரும் நேரடியாக அவரவர்களின் ஆபீஸ் அல்லது வீட்டில் சந்தித்து பேசி கொள்வோம். அந்த சமயத்தில் தான் லோகேஷ் பற்றி எனக்கு நிறைய விஷயங்கள் தெரிய வந்தது. எங்களின் படங்கள் பற்றி நாங்கள் பரிமாறிக்கொள்வோம். அந்த சமயத்தில் தான் அவர் 'கூலி' படத்தின் கதையை எங்களுக்கு சொன்னார். எனவே அவர் 10 படங்களோடு இல்லாமல் 100  படங்கள் எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்” எனப் பேசி இருந்தார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
Stock Market: உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
Stock Market: உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
L.K.Advani: திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
Embed widget