மேலும் அறிய

மயிலாடுதுறை: ‘யார்க்கர்’ நடராஜன் பந்துவீச்சில் கிளீன் போல்டான நடிகை தேவயானி!

டி20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, திருஇந்தளூர் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய செயற்கை புல்வெளி (Turf) விளையாட்டு மைதானம் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் டி.நடராஜன் மற்றும் பிரபல நடிகை தேவயானி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நட்சத்திரங்கள் சங்கமித்த திறப்பு விழா

மயிலாடுதுறை திருஇந்தளூரில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் தனியார் செயற்கை புல்வெளி மைதானம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்குப் சிறப்பு விருந்தினர்களாக, இந்திய கிரிக்கெட் வீரர் டி. நடராஜன், பிரபல திரைப்பட நடிகை தேவயானி, புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பிரபல நகைச்சுவை நடிகர் மணி, ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர் சண்முகவேல் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மைதானத்தை அமைச்சர் லட்சுமி நாராயணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மைதானத்தில் அரங்கேறிய சுவாரஸ்யம்: நடராஜன் Vs தேவயானி

மைதானம் திறக்கப்பட்ட கையோடு, விருந்தினர்கள் அனைவரும் களத்தில் இறங்கி கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் நடராஜன் பந்து வீச, அமைச்சர் லட்சுமி நாராயணன், நடிகர் மணி மற்றும் நடிகை தேவயானி ஆகியோர் பேட்டிங் செய்தனர்.

அப்போது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு அரங்கேறியது. நடிகை தேவயானி பேட்டிங் செய்யத் தயாராக நின்றபோது, நடராஜன் தனது துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். நடராஜன் வீசிய அந்த ஒற்றைப் பந்தில், சற்றும் எதிர்பாராத விதமாக நடிகை தேவயானி 'கிளீன் போல்ட்' ஆனார். இதைக் கண்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவுட் ஆன போதிலும், புன்னகையோடு நடராஜனின் பந்துவீச்சை பாராட்டிய தேவயானி, விளையாட்டு உணர்வை வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களைக் காணத் திரண்டிருந்த ரசிகர்கள், நடராஜன் மற்றும் தேவயானியுடன் போட்டி போட்டுக்கொண்டு செல்பி எடுத்துக்கொண்டனர். நட்சத்திரங்களும் முகம் சுளிக்காமல் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கி உற்சாகப்படுத்தினர்.

"இந்தியா உலகக்கோப்பையை வெல்லும்" - நடராஜன் நம்பிக்கை

நிகழ்ச்சியின் நிறைவாகச் செய்தியாளர்களைச் சந்தித்த கிரிக்கெட் வீரர் டி. நடராஜன், இந்திய அணியின் தற்போதைய நிலை குறித்து உற்சாகமாகப் பேசினார். அவர் கூறியதாவது: "தற்போது இந்திய கிரிக்கெட் அணி மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளது. டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 என மூன்று பிரிவுகளிலும் இந்திய வீரர்கள் உலகத்தரம் வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 260 ரன்கள் குவித்தது மிகப்பெரிய சாதனை. இது வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.

தற்போது தொடங்க உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சரிசமமான பலத்துடன் உள்ளது. இந்திய அணி வெற்றி பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.

விளையாட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை போன்ற வளரும் நகரங்களில் இது போன்ற நவீன செயற்கை புல்வெளி மைதானங்கள் அமைக்கப்படுவது, கிராமப்புற இளைஞர்களுக்குப் பெரிய வாய்ப்பாக அமையும் எனப் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நடிகை தேவயானி பேசுகையில், "இளைஞர்கள் செல்போன்களில் மூழ்கிவிடாமல், இது போன்ற மைதானங்களுக்கு வந்து உடற்பயிற்சியிலும் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க! 100% மானியத்தில் பாசன வசதி பெற தேவையான 8 முக்கிய ஆவணங்கள் இதுதான்...
விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க! 100% மானியத்தில் பாசன வசதி பெற தேவையான 8 முக்கிய ஆவணங்கள் இதுதான்...
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Embed widget