மேலும் அறிய

காவிரியில் புனித நீராடி... அக்னி குண்டத்தில் இறங்கி... மயிலாடுதுறையைச் சிலிர்க்க வைத்த அக்னி விழா!

மயிலாடுதுறை அருகே கூறைநாடு மாமரத்துமேடை திரௌபதி அம்மன் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள்  தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கூறைநாடு மாமரத்துமேடையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோவிலின் 20-ஆம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா  மிக விமரிசையாகவும், பக்தியுணர்வுடனும் நடைபெற்றது. இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

சிறப்பு ஹோமத்துடன் தொடங்கிய திருவிழா

புகழ்பெற்ற இத்திருக்கோவிலின் ஆடி உற்சவப் பெருவிழா கடந்த ஜூலை 19-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் மகா கணபதி ஹோமத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. அன்றைய தினமே விழாவின் தொடக்கமாக பக்தர்களுக்குக் காப்பு கட்டும் நிகழ்வும் நடைபெற்றது. காப்பு கட்டியது முதல் பக்தர்கள் அனைவரும் கடுமையான விரத மேற்கொண்டு அம்மனை வழிபடத் தொடங்கினர்.

தினசரி புராண நிகழ்வுகள்

விழா தொடங்கிய நாள் முதல் நாள்தோறும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மகா பாரத புராண கதைகளை விளக்கும் சிறப்பு நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அந்த வகையில் ஸ்ரீ தர்மர் பிறப்பு, ஸ்ரீகிருஷ்ணர் பிறப்பு, திரௌபதியம்மன் அவதாரம், வில்வளைப்பு விழா, திரௌபதி அம்மன் திருக்கல்யாணம், கிருஷ்ணன் தூது, அரவான் பலியிடுதல் மற்றும் கர்ணமோட்சம் ஆகிய மகாபாரதத்தின் முக்கிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் நாடகமாகவும், உபன்யாசங்களாகவும் தினந்தோறும் நடத்தப்பட்டன. இந்நிகழ்வுகளைக் காண சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் கோவிலுக்கு வருகை தந்தனர்.

கோலாகலமாக நடைபெற்ற தீமிதி விழா

திருவிழாவின் 9-ஆம் நாளான விழாவின் மிக முக்கிய நிகழ்வான ஆடித் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றங்கரைக்குச் சென்று புனித நீராடினர். அங்கு பம்பை மேளம், உடுக்கை மற்றும் தாரை தப்பட்டை முழங்க, சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, மஞ்சள் ஆடை உடுத்தி, காப்பு கட்டி விரதமிருந்த ஆண் மற்றும் பெண் பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையிலிருந்து புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாகக் கையில் வேப்பிலையுடன் ஊர்வலமாகத் திருக்கோவிலை வந்தடைந்தனர்.

அப்போது பக்தர்கள் "அம்மா தாயே..." என்ற பக்தி கோஷங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு எதிரொலித்தன. கோவில் முன்பாகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில், சக்தி கரகம் முன்னே செல்ல, காப்பு கட்டிய பக்தர்கள் அடுத்தடுத்து இறங்கி தீமிதித்துத் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் மிக உற்சாகத்துடனும் பக்தியுடனும் தீ மிதித்து அம்மனின் அருளைப் பெற்றனர்.

சிறப்பு அலங்காரம் மற்றும் மாவிளக்கு வழிபாடு

தீமிதி நிகழ்வு நிறைவு பெற்றதை அடுத்து, மூலவர் மற்றும் உற்சவர் திரௌபதி அம்மனுக்குப் பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு வண்ண மலர்களாலும், சிறப்பு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று அம்மனைத் தரிசனம் செய்தனர். ஏராளமான பெண் பக்தர்கள் கோவில் வளாகத்தில் மாவிளக்கு தீபமிட்டும், தேங்காய் பழம் படைத்தும் அம்மனுக்குத் தங்களது வழிபாட்டைச் செலுத்தினர்.

அன்னதானம் மற்றும் வீதி உலா

விழாவை முன்னிட்டுப் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் சார்பில் சுடச்சுட அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அருள்மிகு திரௌபதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க, பஞ்சமுக தீபாராதனையுடன் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீடுகள்தோறும் பொதுமக்கள் வாசலில் கோலமிட்டு, அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

காவிரியில் புனித நீராடி... அக்னி குண்டத்தில் இறங்கி... மயிலாடுதுறையைச் சிலிர்க்க வைத்த அக்னி விழா!
காவிரியில் புனித நீராடி...அக்னி குண்டத்தில் இறங்கி... மயிலாடுதுறையைச் சிலிர்க்க வைத்த அக்னி விழா!
அதிக பலன்களை அள்ளித்தரும் ஆடிப் பவுர்ணமி ஆனந்த வழிபாடு
அதிக பலன்களை அள்ளித்தரும் ஆடிப் பவுர்ணமி ஆனந்த வழிபாடு
திங்கட்கிழமையில் சிவபெருமானை வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா? - வழிபடும் முறை இதோ!
திங்கட்கிழமையில் சிவபெருமானை வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா? - வழிபடும் முறை இதோ!
மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோத்ஸவம்: சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்!
மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோத்ஸவம்: சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kangana Ranaut on CJP Protest :”போராட்டமா இது வாந்தி வருது இவங்களை வளர்த்தது யார்?” மாணவர்களை அசிங்கப்படுத்திய கங்கனா
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Embed widget