மேலும் அறிய

Aadi Perukku 2024: "விதி அல்ல அல்ல சதி" - மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்த காவிரி நீர் துலாக்கட்டத்திற்கு வராததால் பக்தர்கள் வேதனை

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்த தண்ணீர் துலாக்கட்டத்திற்கு வராததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்த காவிரி தண்ணீர் ஆடிப்பெருக்கு வழிபாட்டுக்கு துலாக்கட்டத்திற்கு வராததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

ஆடிப்பெருக்கு விழா 

"காவிரி பாய்ந்து ஓடி. விவசாயத்தை செழிக்க வைக்கும் காவிரி அன்னையை வரவேற்று காவிரி பாயும் அனைத்து பகுதிகளிலும் ஆடி மாதம் 18-ஆம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதமான ஆடி மாதம் 18-ம் தேதி இந்துக்கள் நீர்நிலைகளில் நீராடி, சிறப்பு பூஜைகள் செய்து ஆடி பெருக்கு விழாவை கொண்டாடுவது வழக்கம். அன்றைய தினம் புண்ணியஸ்தலங்களிலும், ஆற்றங்கரை, கடற்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் மக்கள் திரள்வார்கள்.

Aadi Perukku 2024:

பிரசித்தி பெற்ற துலாக்கட்டம்

அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள், திருமண தம்பதிகள் காவிரி படித்துறையில் மங்கலப் பொருட்களை வைத்து படையல் இட்டும், புதுமணத் தம்பதியினர் தாலி பிரித்து கோர்க்கும் சடங்கும் நடைபெறும். மேலும் பிரசித்தி பெற்ற காவிரி துலாக்கட்ட காவிரி படித்துறையில் தலைவாழை இலையை விரித்து அதில், காமாட்சி விளக்கு, கண்ணாடி, வளையல், கருகமணி, தேங்காய், பழங்கள், மாவிளக்கு, காப்பரிசி ஆகியவற்றை வைத்து காவிரி தாய்க்கு படையல் இட்டு ஏராளமான பெண்கள் வழிபாடு செய்வர்.

Aadi Perukku 2024:

ஆடிப்பெருக்கு வழிபாடு 

இந்த வழிபாட்டில் வேண்டுவதால் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பதும், திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கை. இதனால் புதுமண தம்பதியினர் அன்றைய தினத்தில் தங்களது தாலியை பிரித்து புது தாலியை அணிந்து கொள்வார்கள். காவிரி துலாக் கட்டத்தில் இரண்டு கரைகளிலும் அதிகாலை முதல் ஏராளமான பெண்கள் படித்துறையில் பூஜை நடத்தி காவிரியை வழிபடு மேற்கொள்வார்கள். மேலும், காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள காவிரித்தாய் சிலைக்கு மேள தாளங்கள் முழங்க சீர்வரிசை எடுத்துவரப்பட்ட சிறப்பு பூஜைகள் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டும்.

Aadi Perukku 2024:

துலாக்கட்டத்தின் சிறப்பு 

மேலும் மயிலாடுதுறை நகரின் நடுவே ஓடும் காவிரி ஆற்றின் துலாகட்டம் காசிக்கு நிகராக திகழ்கிறது. ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி புனிதமடைந்ததாக வரலாறு. இங்கு 16 தீர்த்தகினறுகள் உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த காவிரி துலா கட்டத்தில் ஆடி பெருக்கு , அடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி, மாசி மகம் உள்ளிட்ட காலங்களில் இங்கு நீராடி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் சிறப்பாக நடைபெறும்.  

Aadi Perukku 2024:

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை

இந்நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு சுமார் இரண்டு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்லும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆறு முழுவதும் தண்ணீர் கரைபுரண்டு ஓடி சில கிராமங்களுக்கு உள்ளே புகுந்துள்ளது. ஆனால் பிரசித்தி பெற்ற காவிரி துலா கட்டத்தில் தண்ணீர் வராததால், புனித துலா கட்ட புஷ்கர தொட்டியில் ஆடி பெருக்கு விழாவை முழுமையாக கொண்டாட முடியாமல் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

Aadi Perukku 2024:

மாற்று ஏற்பாடு

இந்த சூழலில் துலா கட்டத் தொட்டியில் மயிலாடுதுறை நகராட்சி சார்பில் போர்வெல் மூலம் தண்ணீர் இறைத்து சேமிக்கப்பட்டு, தற்காலிக ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஷவரில் பக்தர்கள் புனித நீராடினர். காவிரி ஆற்றில் சில பகுதிகளில் தண்ணீர் வந்தும், பல்வேறு காரணங்களால் பல பகுதிகளில் தண்ணீர் வராத நிலையில் ஆண்டுதோறும் காவிரி ஆற்றில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் சூழலில் இந்த ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இதனால் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Aadi Perukku 2024:

சமூக ஆர்வலர்கள் வேதனை 

காவிரியில் தண்ணீர் வராத பத்து நாட்களுக்கு முன்பே எடுத்துச் சொல்லியும் மயிலாடுதுறை மக்களை அலட்சியப்படுத்தி பொறுப்பற்ற தன்மையில் மெத்தனமாக இருந்ததால் கடைசி நேரத்தில் கொள்ளிடம் ஆற்றில் வந்து கடலில் கலக்கும் தண்ணீர் துலாக்கத்திற்கு வந்து சேரவில்லை. நாளை மாலை தான் வரும் என்று கூறுவது "சட்டியில் இருந்தும் அகப்பையில் வரவில்லை கதை போல" அமைந்துவிட்டது. மயிலாடுதுறையில் அழுத்தம் தர வேண்டியவர்கள் அக்கறையோடு இல்லாததால் இக்காவிரி கரை வெறிச்சோடி கிடக்கின்றது.

Aadi Perukku 2024:

இதற்கு யார் பொறுப்பு ஏற்பது? கடலென காவிரியில் தண்ணீர் வந்தும் வழக்கம்போல வறண்ட காவிரியின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள புஷ்கர புனித தொட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போர்வெல் தண்ணீரில் தான் ஆடிப்பெருக்கு விழா என்பது விதி அல்ல அல்ல சதி. 10 லட்சம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள சூரியனையே ஆய்வு செய்யும் வல்லமை படைத்த பொறியாளர்கள் எங்கே? அருகாமையில் உள்ள தண்ணீரை உரிய இடத்திற்கு உரிய நேரத்தில் கொண்டுவர வல்லமையற்ற பொறியாளர்கள் இங்கே? வெட்கக்கேடு! கனத்த இதயத்தோடு ஆடிப்பெருக்கு கொண்டாடுவோம் என சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWISTJagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோKomiyam Drinking Fact Check | கோமியம் குடிச்சா நல்லதா?IIT காமகோடி Vs மனோ தங்கராஜ் உண்மை நிலை என்ன?Appavu walk out : ஆளுநர் ரவி சர்ச்சை அப்பாவு வெளிநடப்பு !பீகார் சபாநாயகர்கள் மாநாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
Embed widget