மேலும் அறிய
Advertisement
“இளைஞர்கள் வாக்களிப்பவராக மட்டும் இல்லாமல் வேட்பாளர்களாக மாறுங்கள்”- மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர்
”ஆளுமை உள்ள அரசை தேர்ந்தெடுத்தால் தான் நல்ல எதிர்காலம் அமையும், நல்லவர்கள், இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என பேசினார்.
இளைஞர்கள் வாக்களிப்பவராக இல்லாமல் வேட்பாளர்களாக மாறுங்கள்- நாளைய முதல்வராக, அமைச்சர்களாக இளைஞர்கள் வர வேண்டும்- வாக்குகள் மூலம் ஆளுமையுள்ள அரசை கொண்டு வர வேண்டும் என மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் இளம் வாக்காளர்கள் மத்தியில் பேச்சு.
இந்திய அஅரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 13 வது தேசிய வாக்காளர் தினைத்தையொட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவர்கள் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நகைச்சுவை நாடகம் ஒன்றை நிகழ்த்தி காட்டினர்.
இளைஞர்கள் வாக்களிப்பவராக இல்லாமல் வேட்பாளர்களாக மாறுங்கள்- நாளைய முதல்வராக, அமைச்சர்களாக இளைஞர்கள் வர வேண்டும்- வாக்குகள் மூலம் ஆளுமையுள்ள அரசை கொண்டு வர வேண்டும் என மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் இளம் வாக்காளர்கள் மத்தியில் பேச்சு !@mducollector #madurai #vote | @LPRABHAKARANPR3 pic.twitter.com/CRbYRaOQ8O
— arunchinna (@arunreporter92) January 25, 2023
தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு பாடல் மற்றும் ஸ்லோகன்களை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுந்து நின்று மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் முன்னிலையில் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் பேசுகையில்..,’ தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், விரல் நுனியில் உள்ள சக்தியை பயன்படுத்த வேண்டும், இன்றைய இளைஞர்கள் வெறும் வாக்களிப்பவர்களாக இல்லாமல், வேட்பாளர்களாக மாற வேண்டும், இளைஞர்கள் அரசியலிலும் கவனம் செலுத்த வேண்டும், உங்கள் வாக்குகள் மூலம் ஆளுமையுள்ள அரசை தேர்ந்தெடுக்க வேண்டும், ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை காட்டிக்கொடுத்து இன்றைய இளைய சமுதாயம் வேட்பாளர்களாக களம் இறங்கி நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும், நாளைய முதல்வர்களாக, அமைச்சர்களாக வர வேண்டும் என்பது என் கருத்து, 18 வயது பூர்த்தியான அனைவரும் தங்களை வாக்காளர்களாக இணத்து கொள்ள வேண்டும், ஆளுமை உள்ள அரசை தேர்ந்தெடுத்தால் தான் நல்ல எதிர்காலம் அமையும், நல்லவர்கள், இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion