யாதவ கல்லூரி நிர்வாகிகள் தேர்தலை மீண்டும் நடத்துக - முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த முன்னாள் மாணவர்கள்!
மதுரை யாதவ கல்லூரியில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக யாதவர் கல்லூரி யாதவ முன்னாள் மாணவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மதுரை யாதவ கல்லூரியில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், அந்த தேர்தலை மீண்டும் சரியான முறையில் நடத்த வேண்டும் என்றும் யாதவர் கல்லூரி யாதவ முன்னாள் மாணவர்கள் சங்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “தற்பொழுது யாதவர் கல்லூரி குறித்து தவறான தகவல்களையும் உண்மைக்கு புறம்பான விஷயங்களையும் பொதுமக்களிடமும், சமுதாய மக்களிடமும் சமூகவளைதளங்கள் மூலம் திணிக்க முற்படிகிறார்கள். அது குறித்து சமுதாய மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே யாதவர் கல்லூரி யாதவ முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் சார்பில் நாங்கள் உங்களை சந்திக்கிறோம்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி தோல்வியை தமிழகத்தில் தீர்மானிக்கும் மிகப்பெரிய வாக்கு வங்கியாக யாதவர்கள் வாக்கு வங்கி இருக்கும் அதனை பிரிக்க வேண்டும் என்று சில கட்சிகளின் சூழ்ச்சியில் தான் பிறந்த இனத்திற்கு துரோகம் செய்யும் வகையில் நவனீத கிருஷ்ணன் செயல்பட்டு வருகிறார். ஒருபோதும் இந்த சமுதாயம் அவரை மன்னிக்காது.
நவநீதகிருஷ்ணன் செய்யும் சூழ்ச்சி வேலைகளில் தற்போது அம்பலமாகியுள்ளது. நெல்லை யாதவர்கள் ராமநாதபுரம் யாதவர்கள், மதுரை யாதவர்கள் மற்றும் சிவகங்கை யாதவர்கள் என்று பிரிவினையை உருவாக்கி ஒரு நரி, நான்கு மாடுகள் கதை போல் யாதவர்களை பிரித்தாளும் சூழ்ச்சியை கையில் எடுத்துள்ளார் நவநீதகிருஷ்ணன். கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி இது குறித்த அரங்கேற்றம் சென்னையில் நடைபெற்றது இது ஒரு நாட்டியாஞ்சலி அரங்கேற்ற நிகழ்வில் இது குறித்த திட்டம் தீட்டப்பட்டது
அதன் வெளிப்பாடாகவே திரு.நவநீதகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் விழா மதுரையில் மிகப்பெரிய பொருட்செலவில் நடைபெற்றது. அந்த விழாவில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் படைசூழ அவரது சம்மந்தி தலைமையேற்று வெகு விமர்சையாக மேற்படி சதிதிட்டம் வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது.
நடைபெற்றுள்ளன பொதுக்குழுவை கூட்டாமலேயே தேர்தல் நடைபெற்று முடிந்த கல்லூரி தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. தேர்தல் அறிவிப்பு முறையாக தினசரி நாளிதழில் பிரசுரம் செய்யப்படவில்லை மேலும் கல்லூரி உறுப்பினர்கள் அனைவரையும் நீதிமன்றம் சேர்த்து விட்டதாக எதுவும் கூறவில்லை முறையாக சட்டப்படி அதனை கோர்வை செய்ய பொதுக்குழுவைக் கூட்டி அதனிடம் அனுமதி வாங்கிய பிறகு தேர்தல் நடத்துங்கள் என்று எவ்வளவு கூறியும் நிர்வாக அதிகாரி செவி சாய்க்கவில்லை.
பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த காரணத்தால் தேர்தல் முடிந்து ஒரு மாத காலத்திற்குப் பிறகு கடந்த 09-09-2023 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நடைபெறலாம் என இரவு 9 மணிக்கு தீர்ப்பு வருகிறது தீர்ப்பு வெளிவந்த 12 மணி நேரத்திற்குள்ளாக வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது நீதிமன்ற உத்தரவுப்படி முடிவு அறிவித்திருந்தால் உண்மையில் பாண்டவர் அணியைச் சேர்ந்த எட்டு நபர்களும் கே.பி.எஸ் அணியைச் சேர்ந்த மூன்று நபர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கே.பி.எஸ் அணியைச் சேர்ந்த எட்டு நபர்களும் பாண்டவர் அணியைச் சேர்ந்த மூன்று நபர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது சமூக வலைதளங்களில் வலம் வரும் முறைகேடாக பதிவான சொஸ்திக் முத்திரை அல்லாத வாக்கு சீட்டுகள் இடம் பெற்று இருக்கின்றன. இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது) இந்த வாக்கு சீட்டுகள் எவ்வாறு வந்தது என தெரியவில்லை என்று நிர்வாக அதிகாரியான ஓய்வு பெற்ற நீதி அரசர் கூறிய ஒரு வீடியோ பதிவும் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
அதற்கு என்ன காரணம் என்று புரியாமல் இருந்தோம் ஆனால் அதுவும் நவநீதகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாளில் விழாவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தற்போது தேர்ந்தெடுத்திருக்கும் சட்டப்படி அங்கிகாரம் கிடைக்காத நிர்வாகக் குழுவில் இடம் பெற்றவர்கள் யாதவ சமுதாயத்திடம் கல்லூரி வர வேண்டும் என்று வெளியில் கூப்பாடு போட்டுக் கொண்டு மாற்று சமுதாயத்தினரான நாராயணசாமி என்பவர் கட்டளையிடும் அனைத்திற்கும் அடிபணிந்து நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த நாராயணசாமி நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்தபோது எங்கள் சங்கம் வலுவான எதிர்ப்பை தெரிவித்ததன் காரணமாகவே அவர் அந்த பதவியில் நியமிக்கப்படவில்லை எனக் கூறிவிட்டார்கள். அதற்கு பதில் நவனீதகிருஷ்ணன் அவர்கள் ஹோட்டலில் வேலை பார்க்கும் ஒரு யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்துள்ளனர். இது இன்னும் கேலிக்கூத்து.
யாதவர் கல்வியியல் கல்லூரி காலாவதியாகி உள்ள நிலையில் அந்த கல்லூரிக்கு வேலைக்கு ஆள் எடுப்பது போல் விளம்பரம் செய்கின்றனர் மேலும் வருடங்களுக்கு முன்னாள் வேலை 15 நடைபெற்றதாக கூறி அந்த ஒப்பந்ததாரருக்கு பணம் தராமல் நிலுவையில் உள்ளது எனக்கூறி அதற்கு 46 லட்சம் தர வேண்டும் என முற்பட்டபோது அதனை தடுத்து நிறுத்தியதும் எங்கள் சங்கம்தான் கடைசியாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யாதவ சமுதாயத்தை சார்ந்த ஒரு பெண் ஆசிரியை தற்காலிக பணியில் வேலை செய்து வந்த நிலையில் அவரை வேலையில் இருந்து நீக்கி உள்ளனர்.
இதனையும் கடுமையாக எதிர்த்து உள்ளோம் மொத்தத்தில் தனது பினாமிகளை நிர்வாகிகளாக நியமித்து தினமும் கல்லூரி உறுப்பினர் அல்லாத பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு கல்லூரிக்குள் நுழையக்கூடாது என தடை உத்தரவு போடப்பட்டிருந்த 144 நவனீதகிருஷ்ணன் கல்லூரிக்குள் அத்துமீறி வலம் வருகிறார்.
ஏதாவது இது குறித்து கேட்டால் "ராமன் சீதை உறவு", "அனுமன் ராமன் உறவு "ராமன் லட்சுமணன் உறவு" எனக்கூறி பல கதைகளை கட்டுகிறார். இந்த கதைகளுக்கு பின்னால் பல உண்மைகள் உள்ளன இது குறித்து சிபிசிஐடி விசாரணை நடைபெற வேண்டும் என்பது எங்களது கோரிக்கை நிச்சயம் சட்டபடி முறையாக ஒரு நிர்வாகம் வந்த பிறகு இது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்க எங்கள் சங்கம் வலியுறுத்தும்.
யாதவர் கல்லூரி முறைகேடு குறித்து முறையாக முதல்வரிடம் எங்கள் சமுதாயத்தைச் சார்ந்த பல்வேறு நபர்கள் புகார் அளித்துள்ளனர் எனவே முறையாக சட்டப்படி இதில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது நிச்சயம் தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.” என குறிப்பிடப்பட்டு இருந்தது.