கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்: டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி கண்ணில் கருப்புத் துணி கட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டம்
தேனி அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி கண்ணில் கருப்புத் துணி கட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டம். போராட்டக்காரர்களை கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வோம் என மிரட்டி வீட்டுக்கு அனுப்பிய காவல்துறை.
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் அரசு மதுபானக் கடை எண் 8612 அமைந்துள்ளது. பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த மதுக்கடை செயல்படத் துவங்கிய நாள் முதல் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் செல்லும் பிரதான சாலையில் இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த மதுக்கடைக்கு வரும் மதுப் பிரியர்கள் சாலையின் இரண்டு புறங்களிலும் இரு சக்கர வாகனத்தை கண்டபடி நிறுத்துவதாலும், மதுபோதையில் சாலையில் படுத்து கிடப்பதாலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாமல் நோயாளிகள், கர்ப்பிணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் அளவுக்கு அதிகமான மது போதையில் இந்த வழியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் பெண்களிடம் ஒரு சிலர் தகராறில் ஈடுபடுவதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக இந்த மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும், தற்போது செயல்பட்டு வரும் மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி ஏற்கனவே பெண்கள் கடந்த மாதம் பூதிப்புரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
அப்போது விரைவில் இந்த கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக உறுதி அளிக்கப்பட்ட நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்னும் கடை இடமாற்றம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்று காலை இந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, கண்ணில் கருப்புத் துணி கட்டி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியும் பெண்கள் கலைந்து செல்லாத நிலையில், அவர்களை கைது செய்ய காவல் துறை வாகனம் வரவழைக்கப்பட்ட நிலையில், தற்போது அனைவரும் கலைந்து செல்லாவிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்துவதாக கூறி அனைவரும் கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டப்பட்டதை தொடர்ந்து வேறு வழியின்றி பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.