மேலும் அறிய
Crime ; கணவன் தலையில் கல்லை போட்டு மனைவி கொலை ; போலீசார் கைது செய்து விசாரணை
குடும்ப பிரச்னை காரணமாக கணவன் தலையில் கல்லைப் போட்டு, சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் பகுதியில் குடும்ப பிரச்னை காரணமாக கணவனை மனைவி கல்லால் அடித்ததோடு, அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே குடும்பபிரச்னை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டும், சரமாரியாக வெட்டியும் கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தனக்கன்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.#madurai @LPRABHAKARANPR3
— arunchinna (@arunreporter92) March 26, 2023
| @abpnadu pic.twitter.com/RZDSoyiaOo
திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சர்க்கரை (51) இவருடைய மனைவி அன்னலட்சுமி இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சர்க்கரை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். மேலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பகுதி செயலாளராக களப்பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் சர்க்கரைக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் நேற்று இரவு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் சக்கரை தலையில் மனைவி அன்னலட்சுமி கல்லை போட்டும், உடலில் சரமாரியாக அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தார். தகவல் அறிந்த திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்கரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனைவி அன்னலட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Metro: மதுரையில் மெட்ரோ ரயில்; விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் ஒதுக்கீடு
மேலும் செய்திகள் படிக்க - தொடர்ந்து அதிகரிக்கும் அணையின் நீர்வரத்து.. முல்லை பெரியாறு உட்பட தேனி மாவட்ட அணைகள் நிலவரம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion