மேலும் அறிய
Advertisement
”இசையால் மயங்கிய மதுரை” 108 வீணைகளை மீட்டி விஜயதசமி வழிபாடு..!
மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் வளாகத்தில் 22 ஆம் ஆண்டாக 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது
மழை பெய்ய வேண்டியும், உலக நன்மை வேண்டியும், மாணவ மாணவிகளுக்கு , வீணை இசைக்கலை வளர வேண்டியும், சிறந்த கல்வி பெறவும் வீணைப்பாடல்கள் பாடப்பட்டன.
108 வீணை வழிபாடு
மதுரை மாநகர் தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு உலக அமைதி வேண்டியும் வீணை இசைக்கலை வளர வேண்டியும் மதுரை வீணைக் கலைஞர்கள் மன்றம் சார்பில் கோயில் வளாகத்தில் 22 ஆம் ஆண்டாக 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து வீணை இசை வழிபாட்டினை தொடங்கி வைத்தார்.
விநாயகர் பாடல் உட்பட 22 பாடல்கள் வீணை இசை வழியே இசைக்கபட்டன
இதனை தொடர்ந்து முனைவர் S.மல்லிகா தலைமையில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது. இதில் மதுரை, சென்னை, நாமக்கல், திண்டுக்கல், பவானி, ஈரோடு ஆகிய இடங்களில் இருந்து மாணவிகள், பேராசிரியர்கள் என வீணை இசை கலைஞர்கள் என ஏராளமானவர்கள் வீணை வழிபாட்டில் பங்கேற்றனர். அப்போது மழை பெய்ய வேண்டியும், உலக நன்மை வேண்டியும், மாணவ மாணவிகளுக்கு , வீணை இசைக்கலை வளர வேண்டியும், சிறந்த கல்வி பெறவும் வீணைப்பாடல்கள் பாடப்பட்டன. இதேபோன்று விநாயகர் பாடல் உட்பட 22 பாடல்கள் வீணை இசை வழியே இசைக்கபட்டன, வீணை இசை வழிபாட்டை பக்தர்கள், மாணவ மாணவியர்கள் , பெற்றோர்கள், இசை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
அதே போல் மீனாட்சியம்மன் சிவபூஜை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பலித்தார்
உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா 3ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். அதன்படி விழாவின் 9ஆம் நாளில் கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி சன்னதியின் 2ஆம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் மீனாட்சியம்மன் சிவபூஜை திருக்கோலம் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரி விழாவினை முன்னிட்டு கோயிலின் நான்கு கோபுரங்கள் மற்றும் ஆடி வீதிகளில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
சிவபூஜை அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் மனமுருக தரிசனம் செய்தனர்.
நவராத்திரி உற்சவ விழாவையொட்டி சிவபெருமான் திருவிளையாடல்களை எடுத்துரைக்கும் வகையிலான அமைக்கப்பட்ட கொலு மண்டபத்தில் 13 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு திருவிளையாடல் புராணங்கள் இடம் பெற்றுள்ளன. நவராத்திரி முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைக்கப்பட்ட கொலுமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்த்து சென்றனர். இதேபோன்று சிவபூஜை அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் மனமுருக தரிசனம் செய்தனர்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Power Shutdown : மதுரை மாநகரில் (15.10.24) அன்று எங்கெல்லாம் மின்தடை? - இதுல உங்க பகுதி இருக்கா பாருங்க?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion