மேலும் அறிய

வரிச்சியூர் செல்வம் கூட்டாளி வர்க்கீஸ் கைது: அடுத்த நாளே மரணம்! திண்டுக்கல்லில் பரபரப்பு

போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வத்தலகுண்டு பகுதியில் பதுங்கி இருந்த வரிச்சியூர் செல்வத்தை கடந்த மாதம் கைது செய்தனர்.

பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி வர்க்கீஸ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை தி.மு.க பிரமுகர் கதிரவனைக் கடத்தி ஒரு கும்பல் பணம் பறித்தது. மேலும் அந்தக் கும்பல், திண்டுக்கல்லில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார், திண்டுக்கல்லில் ஒரு தங்கும் விடுதியில் சோதனையிட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த சினோஜ் (32) உயிரிழந்தார்.

வரிச்சியூர் செல்வம் கூட்டாளி வர்க்கீஸ் கைது: அடுத்த நாளே மரணம்! திண்டுக்கல்லில் பரபரப்பு

இந்த வழக்கில், மதுரையைச் சேர்ந்த வரிச்சியூர் செல்வம் (57), கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த அஜித், எர்ணாகுளத்தைச் சேர்ந்த வர்க்கீஸ் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த 3 பேர் மீதும், திண்டுக்கல் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஆனால் வரிச்சியூர் செல்வம், வர்க்கீஸ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் வரிச்சியூர் செல்வம் (57) என்பவரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து வரிச்சியூர் செல்வம் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில் நகர் டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வத்தலகுண்டு பகுதியில் பதுங்கி இருந்த வரிச்சியூர் செல்வத்தை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர்.

வரிச்சியூர் செல்வம் கூட்டாளி வர்க்கீஸ் கைது: அடுத்த நாளே மரணம்! திண்டுக்கல்லில் பரபரப்பு

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கேரளாவில் வைத்து வர்க்கீசை, திண்டுக்கல் வடக்கு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தற்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே வர்க்கீஸ் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Embed widget