காதலர் தினத்திற்கு எதிர்ப்பு; காதலர்களை ஆபாசமாக திட்டி விரட்டிய விசுவ இந்து பரிஷத் - மதுரையில் பரபரப்பு
போராட்டத்தில் ஈடுபட்ட விசுவ இந்து பரிசத் அமைப்பினர் 10 பேரை தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்த உலகம் மிகவும் விசித்திரமானது. பல்வேறு மதங்கள், கலாச்சாரங்கள், பண்பாட்டைக் கொண்ட இங்கு பல்வேறு விதமான பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி கொண்டாடப்படும் அந்த பண்டிகைகள் குறிப்பிட்ட ஒன்றிற்கு சொந்தமானதாக பார்க்கப்படும். ஆனால், உலகம் முழுவதும் ஒரு சில தினங்கள் மட்டும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கும்.
அதிலும் குறிப்பாக அன்னையர் தினம், தந்தையர் தினம், சகோதர, சகோதரர்கள் தினம் உள்ளிட்டவை கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். மேலும், காதலர் தினமும் இந்தியா போன்ற மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றக்கூடிய நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனாலும், சில அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் மதுரை ராஜாஜி பூங்காவில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காதலர்களை ஆபாசமாக திட்டி விரட்டி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி விசுவ ஹிந்த் பரிசத் அமைப்பினர் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.