மேலும் அறிய
Advertisement
எய்ம்ஸ் உள்ளிட்ட திட்டங்களில் ஒன்றிய அரசு அரசியல் செய்கிறது - அமைச்சர் பிடிஆர் காட்டம்
'ஒன் சைடு கேம்' ஆடுகிறது ஒன்றிய அரசு என நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி
நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் மதுரை மாநகராட்சி 77 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட தகவல் குறித்து மத்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்சியிடம் கேட்டு வருகிறது. தி.மு.க., அறிக்கை குறித்து என்ன சொல்லப்பட்டுள்ளது ?
பொதுவாக நிதி அமைச்சர் என்ற முறையில் நிர்வாகம் சார்ந்த கேள்விகளுக்கு பதில்கள் தெரிவித்து வருகிறேன். ஆனால், கட்சியில் அடிப்பட்ட தொண்டனாக செயல்பட்டு வருகிறேன். கட்சி தொடர்பாக கேள்விக்கு பதில் சொல்லும் அந்தஸ்தில் இல்லை. இதுகுறித்த கேள்விகளுக்கு கட்சியில் மூத்த நிர்வாகிகள் பதில் அளிப்பார்கள்.
இமாச்சல் பிரதேசம், பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் வேலைகள் ஆரம்பிக்கவில்லையே ?
ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டது பிலாஸ்பூர் எய்ம்சும், மதுரை எய்ம்சும். ஆனால், ஒன்று திறக்கப்பட்டு விட்டது. ஒன்றுக்கு இன்னமும் சுவர் கூட கட்டவில்லை. அரசியல் ரீதியாக ஒன்றிய அரசு ஒன் சைட் கேம் ஆடுவது போல தெரிகிறது. ஒன்றிய அரசு அரசியல் நோக்கத்துடன் தான் அனைத்தையும் செய்வதாக தெரிகிறது.
மக்கள் நலனுக்காக எதையும் செய்வதாக தெரியவில்லை. ஒரு தலைப்பட்சமாக நிதியினை வைத்து பல அரசியல் தந்திர வேலைகளை செய்ய முடியும் என்று ஒன்றிய அரசு நினைக்கிறது. மேலும் மத்திய அரசு ஏதோ ஒரு புதிய பெயரினை வைத்து திட்டத்திற்கு ஒன்றிய அரசு 60 சதவீதம் என்றும் மாநில அரசு 40% என்றும் அறிவித்து பின்னர் அந்த திட்டத்தினை ஓராண்டு காலம் கழித்து 40 சதவீதம் ஒன்றிய அரசு வழங்கும் என்றும் மீதமுள்ள 60 சதவீதத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறது. பின்னர் இன்னும் சில ஆண்டுகள் கழித்து 25 சதவீதம் ஒன்றிய அரசு வழங்குவது என்றும் மீதமுள்ள 75 சதவீதத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் கூறுகிறது ஆனால் அந்தத் திட்டத்திற்கு பிரதமர் பெயரில் திட்டத்தை வகுத்து வைத்துவிட்டு மாநில அரசு அதிக தொகையை வழங்க வேண்டும் என்று கூறுவது சரியான நிலை இல்லை.
மதுரையில் நடைபெறும் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் தொடர்பான கேள்விக்கு
ஒன்றிய இரண்டு துறை அமைச்சர்கள் அறிக்கையை ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கு சமர்பிக்கவில்லை என்பதால் ஜி.எஸ்.டி கூட்டம் நடத்தவில்லை முடியவில்லை. இது குறித்த ஒன்றிய நிதி அமைச்சரிடன் கேட்டதற்கு இதை தான் சொன்னார். அறிக்கை சமர்பிக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் கூட்டத்தையாவது நடத்தவேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சேலம்
கல்வி
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion