மேலும் அறிய

மதுரையில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டத்தின் போது இன்ஜின் மோதி வடமாநில தொழிலாளர்கள் இருவர் பலி !

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற இன்ஜின் சோதனை ஓட்டத்தின் போது இன்ஜின்மோதி வடமாநில தொழிலாளர்கள் இருவர் பலி - இருப்புப்பாதை காவல்துறையினர் விசாரணை.

சக பணியாளரை காப்பாற்ற முயன்று பரிதாபமாக உயிரிழந்த வடமாநில தொழிலாளர். 

ரயில் சோதனை ஓட்டம்

மதுரை மாவட்டம்  ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புளியங்குளம் மேம்பாலம் கீழ் அமைந்துள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி செல்வதற்கான ரயில் இன்ஜினின் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது புளியங்குளம் அருகேயுள்ள சிலார்ஷா நகர்  பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இருவர் நடந்து சென்ற போது அதனை பார்த்த, இன்ஜின் பைலட் ஒலி எழுப்பியுள்ளார். அப்போது நொடிப்பொழுதில் இருவர் மீதும் இன்ஜின் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து  இன்ஜின் பைலட்  அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த சிலைமான் காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு விசாரணை நடத்தினர். 

- Engineering Counselling 2024: அட்டவணையை குறிச்சி வச்சிக்கோங்க! ஜூலை 22 தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு!

வடமாநில தொழிலாளர்கள்

இதில் விபத்தில் உயிரிழந்த இருவரும் புளியங்குளம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டுவந்த உத்திரபிரதேச மாநிலம் கோராக்பூர் பகுதியை சேர்ந்த வடமாநில தொழிலாளர்களான மதுசூதன் ப்ராஜபதி (30) மற்றும் க்யானந்த பிரதாப் கௌத் (22) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரது உடலையும் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக சிலைமான் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைத்தனர். விபத்தில் உயிரிழந்த  இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் தனியார்பள்ளி ஒன்றில் டைல்ஸ் ஒட்டும் பணிக்காக தனது நண்பர்களுடன் வந்து ஒரு மாதம் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த மதுசூதனன் ப்ராஜபதி நடந்துகொண்டிருந்தபோது இன்ஜின் வந்தபோது தடுமாறிய நிலையில் அவரை கைப்பிடித்து காப்பற்ற க்யானந்த பிரதாப்பும் முயன்றபோது இருவர்மீது மோதி உயிரழந்தது தெரியவந்துள்ளது.

நண்பர் உயிரிழந்த சோகம்

நண்பனை காப்பற்ற சென்றவரும் ரயில் இன்ஜின் மோதி உயிரிழந்த சம்பவம் இருவருடன் பணிபுரிந்த சக பணியாளர்களிடயே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களது பணிக்ககாக தங்கியிருந்த பள்ளியின் அருகே தங்களுடன் பணிபுரிந்த இருவரும் ரயில்மோதி உயிரிழந்த சம்பவம் தெரியாமல் இருந்த சக பணியாளர்களுக்கு காவல்துறையினர் வந்த பின்பே உயிரிழந்தது தெரிந்ததாக கூறினா். இந்த விபத்து தொடர்பாக இருப்புப்பாதை காவல்துறையினரும் சம்பவ இடத்தில் நேரில்வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai: உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம்! வரிந்துகட்டிக்கொண்டு வந்த ஊர்மக்கள்! ஆர்.பி உதயகுமார் ஆதரவு

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Kanakkanpatti Railway Station: ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படம் எடுக்கப்பட்ட ரயில் நிலையம் - செயல்பாட்டுக்கு வருமா?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
TN Govt: இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள் - ஹாட்ரிக் அடிப்பாரா சிஎம் ஸ்டாலின்?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
T20 World Cup: இந்தியாவிற்கான இன்னொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம்? டி20 உலகக் கோப்பையை மாற்றும் ஐசிசி?
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Embed widget