மேலும் அறிய
மதுரை எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - இருவர் கைது
ஜெயக்குமார் மற்றும் உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூரை சேர்ந்த நித்யானந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
மதுரை நரிமேடு பகுதியில் உள்ள லேடிடோக் கல்லூரி வளாகத்தில் எஸ்.பி.ஐ., வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மற்றும் பணம் டெபாசிட் இயந்திரமும் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் ஏ.டி.எம்., இயந்திரம் மற்றும் டெபாசிட் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.
#madurai | மதுரை நரிமேடு பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சொக்கிகுளம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், உத்திரபிரதேசம் ராம்பூரை சேர்ந்த நித்யானந்த் ஆகிய இருவர் கைது.
— arunchinna (@arunreporter92) December 14, 2022
Further reports to follow @abpnadu#madurai | #atm | #sbi #Arrest pic.twitter.com/UlW75bOjA5
இதனை தலைமை அலுவலகத்தில் இருந்து சி.சி.டி.வி., மூலமாக கண்காணித்த அதிகாரிகள் உடனடியாக தல்லாகுளம் காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து விரைந்துவந்தனர். இதனையடுத்து ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மதுரை அண்ணாநகர் சொக்கிகுளம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூரை சேர்ந்த நித்யானந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் இருந்த ஏ.டி.எம்., இயந்திரம் உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Physically Disabled Cricket: திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி: ஒரு நாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்
மேலும் செய்திகள் படிக்க - மதுரை மலர் சந்தையில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.3000க்கு விற்பனை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















