மேலும் அறிய

கிராமங்களில் ஆடு திருடுவது போல் எம்.எல்.ஏ.,க்களை களவாணி வேலை செய்கிறார்கள் - ttv தினகரன் காட்டம் !

திமுக கூட்டணியில் வெற்றி பெற்று தவெக அரசாங்கத்தின் அமைச்சர் ஆனது நியாயம் என்றால் எந்த கூட்டணியும் நியாயம்தான்- மதுரையில் அமமுக டிடிவி தினகரன் பேட்டி.

அதிமுக திமுகவும் ஒன்றாக வருமா என கேட்கிறீர்கள்? ஒரு அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமென்றாலும் ஒன்றாக சேர்க்கும். கடந்த காலத்தில் அண்ணாவும் ராஜாஜியும் ஒன்று சேர்ந்தார்கள். அதுபோல் பல உதாரணங்கள் உள்ளது.

அமமுகவும் அம்மாவுடைய கட்சிதான்

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமமுகவின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

அதிமுகவில் இணையப்போகிறீர்களா என்ற கேள்விக்கு,

"என்ன சொல்வதென்றே தெரியவில்லை" என்று பதிலளித்த அவர், தற்போது அதிமுகவுக்கு ஆதரவாக அதே கூட்டணியில் இருப்பதாகவும், "அமமுகவும் அம்மாவுடைய கட்சிதான்" என்றும் கூறினார்.

கரூர் சம்பவத்திற்கு போலீஸ் தான் காரணம் என விஜய் கூறுவது குறித்த கேள்விக்கு?

போலீஸ் மந்திரி விஜய் தானே என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்.? விஜய் பேசியது உண்மை என்றால் சிபிஐ விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. எல்லா உண்மையும் வெளிப்படும். விஜய் இன்னும் சினிமா நடிகராகவே இருக்கிறார். சினிமா கிளைமாக்ஸில் பேசுவது போல பேசுகிறார். முதல்வர் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்" என்றார். மேலும், "ரீல் போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள், ரீல் விட்டே ஆட்சி செய்கிறார்கள்" என்றும் விமர்சித்தார். கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை வழங்குவது குறித்து,

"கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இருக்கிறது" என்றும் விமர்சனம் செய்தார். மேலும், தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் என்பது வளர்ச்சி திட்டங்களுக்காக மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும், வெற்றி பெற்ற பிறகு அகம்பாவத்துடன் பேசக் கூடாது என்றும் தெரிவித்தார். முதல்வர் என்பதை உணர்த்தி செயல்பட வேண்டும்., அண்ணா எம்ஜிஆர் போல் 50, 60 ஆண்டுகள் அரசியலில் சேவை செய்து வந்தாரா. ஆட்சிக்கு வந்தது சினிமா கவர்ச்சி தான்.

பிள்ளை பிடிப்பது போல் பிடிப்பதை நிறுத்த வேண்டும்.

மக்கள் தவெக வேட்பாளரை எதிர்த்து நின்றதால் தான் விஜயபாஸ்கரை வெற்றி பெற வைத்தார்கள்.. இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள்.இந்த அவதாரம் புருஷன் அவர்களாக வந்தார்கள் என்று சொல்வது குழந்தை கூட நம்பாது. குதிரை பேரன் என்று சொன்னால் கோவித்து கொள்கிறார்கள். அதிமுக எம்எல்ஏகள் ரிசைன் செய்ய வைத்தது ஒரு வகை ஊழல் தான். பிள்ளை பிடிப்பது போல் பிடிப்பதை நிறுத்த வேண்டும்..

முதல்வர் களவாணி என பேசுகிறாரே..

விஜய் பார்த்து சொல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும். இவர்தான் களவாணி.! கிராமங்களில் ஆடு திருடுவது போல் எம்எல்ஏ களவாணி. அமமுக எம்எல்ஏ கடிதம் 420 ஆக கொடுக்கப்பட்டது. எம்எல்ஏ களவாணி யாரு..? வெற்றி பெற்று விட்டோம் என்றால் அகம்பாவத்தில் பேசக்கூடாது. திமுக அதிமுக இணைந்து ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்று சொல்கிறார். அமமுக எம்எல்ஏ, அதிமுக எம்எல்ஏ ரிசைன் செய்தது எல்லாம் களவாணி தானே.

பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக திருமாவளவன் தவெக, திமுக ஒரு அணியில் சேர வேண்டுமென கூறுகிறார்.

இது பொலிட்டிக்கல் ஸ்ட்ரென்ட் தான்.

அதிமுக திமுகவும் ஒன்றாக வருமா என கேட்கிறீர்கள்?

ஒரு அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமென்றாலும் ஒன்றாக சேர்க்கும். கடந்த காலத்தில் அண்ணாவும் ராஜாஜியும் ஒன்று சேர்ந்தார்கள். அதுபோல் பல உதாரணங்கள் உள்ளது. திமுக கூட்டணியில் வெற்றி பெற்று தவெக அரசாங்கத்தின் அமைச்சர் ஆனது நியாயம் என்றால் எந்த கூட்டணியும் நியாயம்தான். தவெக இந்த தேர்தலில் 35 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளார். அதனை வீழ்த்தக்கூடிய சக்திகளை மற்ற கட்சிகள் எடுப்பதில் மாற்றுக் கருத்து தவறு இல்லை. ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பயத்தில் தான் காங்கிரஸ் கூட நம்புவார்கள் மற்றவர்கள் கலைந்து சென்றாலும் கூட பெரும்பான்மை காட்டுவதற்காக அதிமுகவில் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்து சட்டசபையில் பெரும்பான்மை காட்டுவதற்காக சதி செய்கிறார். வைகோ கலைஞர், அம்மா அனைவரையும் புகழ்ந்து பேசி இருக்கிறார் தற்போது விஜய் புகழ்ந்து பேசுகிறார்.

பழைய மக்கள் நல கூட்டணியா?

விஜயகாந்துடன் விஜய் ஒப்பிடாதீர்கள்.

Advertisement

தலைப்பு செய்திகள்

விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget