ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
உதயநிதியின் கைது கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது செய்யப்பட்டார்.

உதயநிதி சர்ச்சை பேச்சு
கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுக்க தவறிய தவெக அரசை கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய் குறித்து நடிகையுடன் தொடர்பு படுத்தி சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசியதாக எதிர்ப்புகள் கிளம்பியது. தவெக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சாவூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் புகார் தெரிவித்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் சென்னையில் உள்ள நீலாங்கரை இல்லத்திற்கு வருகை தந்த போலீசார் தற்போது அவரை கைது செய்த போலீசார் உதயநிதியை தஞ்சாவூருக்கு போலீஸ் வேனில் அழைத்து சென்றுள்ளனர்.
ஓபிஎஸ் போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனியில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் திமுகவினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். "போடாதே போடாதே பொய் வழக்கு போடாதே" கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் தவெக அரசை கண்டிக்கின்றோம் என்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓபிஎஸ் கைது
இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உட்பட திமுகவினரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.இதனால் தேனி பழைய பேருந்து நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















