Track Alagar: சித்திரைத் திருவிழா: கள்ளழகர் இருக்கும் இடத்தை தெரிந்துகொள்ள “மதுரை காவலன்” செயலி!
“ஸ்பாட்டர்ஸ்” எனப்படும் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் அனுபவமிக்க காவல்துறையினர் மஃப்டியில் மக்களோடு மக்களாகக் கலந்து பாதுகாப்பு வழங்க உள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக இரு ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்ற விழாவானது இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதியுடன் நடைபெற்ற உள்ளது மதுரை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 12ஆம் தேதி பட்டாபிஷேகமும், 14ஆம் மினாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், 15ஆம் தேதி தேரோட்டமும், 16ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவின்போது மதுரை மக்களின் நலன் கருதி மதுரை காவலன் என்ற செயலியில் உள்ள Track Alagar என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
#Abpnadu | சித்திரை திருவிழாவின்போது மதுரை மக்களின் நலன் கருதி மதுரை காவலன் என்ற செயலியில் உள்ள Track Alagar என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. Further reports to follow - @abpnadu | @SRajaJourno | #maduraipolice | #MaduraiChithiraiFestival2022 | #alagar | #trackalagar pic.twitter.com/lebRDAiXDZ
— Arunchinna (@iamarunchinna) April 9, 2022


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

