மேலும் அறிய
Advertisement
Special Train : கார்த்திகை மாத அமாவாசை வழிபாடு...! மதுரையிலிருந்து காசிக்கு சிறப்பு ஆன்மீக ரயில்..
பயண கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து ஆகியவை சேர்த்து குறைந்த கட்டணமே இந்த சிறப்பு ரயிலில் வசூலிக்கப்படுகிறது.
இந்தியாவின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலா தலங்களை தரிசிக்க இந்திய ரயில்வே பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது. மதுரையில் இருந்து அடுத்த பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் நவம்பர் 18 அன்று இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் காசி, கயா, பூரி ராமேஸ்வரம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல இருக்கிறது.
நவம்பர் 18 அன்று புறப்படும் ரயில் திண்டுக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக முதலில் விஜயவாடா செல்கிறது. பின்பு நவம்பர் 19 அன்று உத்திரபிரதேசம் மாணிக்பூர் சித்திரக்கூடம் சென்று நவம்பர் 20 சர்வ ஏகாதசி தினத்தன்று ராம்காட்டில் புனித நீராடி குப்த கோதாவரி குகை கோயில், காம்தகரி, சதி அனுசுயா கோயில்களில் தரிசனம். நவம்பர் 21 பிரதோஷ தினத்தன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி ராமஜன்ம பூமி கோயில் தரிசித்து நவம்பர் 22 சிவராத்திரி தினத்தன்று காசி கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோயில்களில் தரிசனம்.
நவம்பர் 23 சர்வ அமாவாசை அன்று சிரோ கயாவில் முன்னோர்கள் வழிபாடு முடிந்து விஷ்ணு பாத தரிசனம். நவம்பர் 24 அன்று ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் ஆலயம், கொனார்க் சூரியனார் கோவில் தரிசனம். நவம்பர் 26 அன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் 21 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம்.
நவம்பர் 27 அன்று சுற்றுலா ரயில் மதுரை வந்து சேரும். பயண கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து ஆகியவை சேர்த்து குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுற்றுலா ரயிலுக்கான பயண சீட்டுகளை www.ularail.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்கள் அறிய 7305858585 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion