மேலும் அறிய
Advertisement
தென் மாவட்டங்களில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள்...!
சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்தது குறித்து போலீஸ் விசாரணை
1. தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையம் மற்றும் சிவகங்கை பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ) நேற்று நடத்திய திடீர் சோதனை
2. ஜி.எஸ்.டி கவுன்சில் மத்தியில் உள்ளது. அதைப்போல தமிழ்நாட்டில் ஒரு கவுன்சில் கொண்டு வர ஆலோசனைக்குழு அமைக்க உள்ளோம். ஆக்கப்பூர்வமாக சிந்திக்ககூடிய வணிகர்களை சேர்க்க உள்ளோம் என வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மதுரையில் பேட்டி
3. மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் கோட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட இருப்பதாக மதுரை கோட்ட தெற்கு ரயில்வே தகவல்.
4. மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடியாக மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். மதுரை மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
5.மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை துவக்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் கரும்புகளை கைகளில் ஏந்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் நூதன போராட்டம்.
6. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இந்தாண்டு பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ள நிலையில் இளைஞர்களை கவரும் வகையில் ’டின் பீர்’ வடிவில் பட்டாசு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
7. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பல்நோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட உள்ளது என்று வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் தகவல்.
8. ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் டீக்கடை நடத்தி வரும் ஆனந்தன் (52) என்பவரிடம் பூமிநாதன் (30) என்பவர் அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டி கடையை சேதப்படுத்தியதாக கொடுத்த புகாரில் பூமிநாதனை கைது.
9. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்தது குறித்துபோலீசார் விசாரணை
10. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மட்டும் 9 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32938-ஆக உயர்ந்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion