Watch Video: திமிறி எழுந்த ஜல்லிக்கட்டு காளை; சுதாரித்த அண்ணாமலை - அதிர்ச்சி வீடியோ
4 ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் தனித்தனியாக மரியாதை செய்து அண்ணாமலை வணங்கினார்.
மதுரைமேலூரில் என் மண், என் மக்கள் பயணத்தை துவக்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஜல்லிக்கட்டு காளை மூலம் வரவேற்பு அளித்தபோது, திடீரென திமிறி எழுந்து காளை தவ்வியபோது, உடனே அண்ணாமலை சுதாரித்துக் கொண்டார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மேலூரில் என் மண்,என் மக்கள் பயணத்தை துவக்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேலூர் அரசு கலைக்கல்லூரி முன்பு தனது பாதயாத்திரை பயணத்தை துவக்கினார்.
அண்ணாமலை அவர்களுக்கு பாஜக கட்சினர் கும்ப மரியாதை, ஜல்லிக்கட்டு காளைகளை வைத்து வரவேற்பு, கரகாட்டம் உள்ளிட்டவை மூலம் உற்சாக வரவேற்பினை தொண்டர்கள் அளித்தனர். மேலூர் அரசு கலைக்கல்லூரியில் இருந்து மதுரை - திருச்சி சாலையில் பயணத்தை துவங்கி 3 கி.மீ தூரம் நடைபயணம் சென்று பின் பேருந்து நிலையம் முன்பு தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
இந்த நடைபயணத்தையொட்டி மதுரை மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக பா.ஜ.க தொண்டர்கள் ஜல்லிக்கட்டு காளை மூலம் உற்சாக வரவேற்பு அளித்தனர். 4 ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் தனித்தனியாக மரியாதை செய்து அண்ணாமலை வணங்கினார். அப்போது ஒரு ஜல்லிக்கட்டு காளை திடீரென திமிறி எழுந்து சீறி பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின் உடனடியாக காளையை உரிமையாளர் அடக்கி பிடித்து ஆசுவாசப்படுத்தினார். தொடர்ந்து அந்த காளைக்கும் மரியாதை செய்து அண்ணாமலை அங்கிருந்து புறப்பட்டார்.
திமிறிய காளை... சுதாரித்த அண்ணாமலைhttps://t.co/wupaoCzH82 | #annamalai #BJP #tamilnadu #Viral pic.twitter.com/V9mJWhOJ8p
— ABP Nadu (@abpnadu) August 4, 2023
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்