குளிக்கச் சென்ற இடத்தில் விபரீதம்.. நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள்! நத்தம் அருகே சோகம்!
ஆழமான பகுதியில் நீரில் மூழ்கியதில் ஒருவரை ஒருவர் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டபொழுது மூன்று சிறுவர்களும் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
திண்டுக்கல் அருகே குளத்தில் குளிக்க சென்ற எட்டாம் வகுப்பு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்கள்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொசவபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8 ம் வகுப்பு பயின்று வரும் கோகுல் (13), 5-ஆம் வகுப்பு பயின்று வரும் யாதேஸ்வர்( 10) 5ம் வகுப்பு பயின்று வரும் டாங்லின் இன்பராஜ்(10) ஆகிய மூன்று பேரும் இன்று பள்ளி விடுமுறை என்பதால் கொசவப்பட்டியில் உள்ள பேபி குளம் என்ற கல் குத்து ஊரணியில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது மூன்று பேரும் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆழமான பகுதிக்கு சென்று குளித்த பொழுது நிலை தடுமாறி ஆழமான பகுதியில் நீரில் மூழ்கியதில் ஒருவரை ஒருவர் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டபொழுது மூன்று பேரும் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
இதையும் படிங்க: DMK Election: 75 வயசு, ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத திமுக - 200 தொகுதிகள் சாத்தியமா? விஜய் மூவ்..!
உயிரிழந்த சிறுவர்கள்:
வெகு நேரமாகியும் குளிக்கச் சென்ற மாணவர்கள் வீட்டிற்கு வரவில்லை என பெற்றோர்கள் தேடிக் கொண்டு இருந்த நிலையில் குளத்து வழியாக சென்றவர்கள் குள கரையின் மேலே மூவரது உடைகள் இருந்ததை கண்டு குளத்தை பார்க்கும் பொழுது ஒருவரின் உடல் மட்டும் மிதந்து கொண்டிருந்ததை பார்த்தவர்கள் உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்களிடம் தெரிவித்தனர். அங்கு வந்த பொதுமக்கள் சானார்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையும் படிங்க: Vidaamuyarchi: "இந்த பொங்கல் விடாமுயற்சிதான்" டப்பிங்கை முடித்த அஜித்! குஷியில் ரசிகர்கள்!
போலீசார் விரைவு:
தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களின் உதவியோடு மூழ்கிக் கிடந்த மாணவர்களை தேடும்பணியில் ஈடுபட்டு, பின்பு நீரில் மூழ்கி இறந்த மூன்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று மாணவர்கள் நீச்சல் பழகச் சென்று நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.