Meenakshi Kalyanam : 7500 கிலோ அரிசி.. 6 டன் காய்கறிகள்.. லட்சம் பேருக்கு விருந்து.. மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண விழா..
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தின் மாப்பிள்ளை வீட்டார் விருந்து - 7500 கிலோ அரிசி மற்றும் 6 டன்னுக்கு காய்கறிகளை பயன்படுத்தி 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு விருந்து ஏற்பாடு
மதுரையின் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் திருவிழா வரும் மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று மே 2-ஆம் தேதியன்று மீனாட்சிக்கும் சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை காண உள்ளனர். அதற்கான ஏற்பாடு பணிகளை கோயில் நிர்வாகமும் அறநிலையத்துறையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தின் மாப்பிள்ளை வீட்டார் விருந்து - 7500 கிலோ அரிசி மற்றும் 6 டன்னுக்கு காய்கறிகளை பயன்படுத்தி 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சேதுபதி பள்ளியில் சாப்பாடு தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது pic.twitter.com/cIxe6TpkdY
— arunchinna (@arunreporter92) May 1, 2023
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்