![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
திருச்செந்தூர் - பொள்ளாச்சி விரைவு ரயில் இயக்கப்படும் தேதி மாற்றம் !
திருச்செந்தூர் - பொள்ளாச்சி விரைவு ரயில் இயக்கப்படும் தேதி மாற்றம் எனவும், ரயில் சேவை தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என மதுரைக்கோட்ட தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
![திருச்செந்தூர் - பொள்ளாச்சி விரைவு ரயில் இயக்கப்படும் தேதி மாற்றம் ! Thiruchendur - Pollachi Express will be rescheduled திருச்செந்தூர் - பொள்ளாச்சி விரைவு ரயில் இயக்கப்படும் தேதி மாற்றம் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/29/ac152d5beea241f8cc323cad3b0d4f98_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருச்செந்தூர் - பொள்ளாச்சி விரைவு ரயில் டிசம்பர் 15ம் தேதி முதல் திருச்செந்தூரிலிருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு இரவு 08.40 மணிக்கு பொள்ளாச்சி சென்று சேரும் எனவும், மறுமார்க்கத்தில் பொள்ளாச்சி - திருச்செந்தூர் விரைவு ரயில் டிசம்பர் 16 முதல் பொள்ளாச்சியில் இருந்து காலை 06.40 மணிக்கு புறப்பட்டு மாலை 03.45 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
#abpnadu
— Arunchinna (@iamarunchinna) December 14, 2021
திருச்செந்தூர் - பொள்ளாச்சி விரைவு ரயில் இயக்கப்படும் தேதி மாற்றம் எனவும், ரயில் சேவை தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என மதுரைக்கோட்ட தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில்கள் கோமங்கலம், உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, தாழையுத்து, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சினா விளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும், இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் என கூறப்பட்டிருந்தது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
#Abpnadu
— Arunchinna (@iamarunchinna) December 14, 2021
ரயில்கள் கோமங்கலம், உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், விருதுநகர், காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும், இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருச்செந்தூர் - பொள்ளாச்சி ரயில் சேவை இயக்கப்படும் நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மதுரைக்கோட்ட தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மீண்டும் இந்த ரயில் இயக்கப்படும் நாள் பின்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)