(Source: ECI/ABP News/ABP Majha)
எய்ம்ஸில் செங்கல் கூட இல்லை - மதுரை எம்பி சு.வெங்கடேசன்
எய்ம்ஸ் அமைப்பதற்கான உயர்த்தப்பட்ட நிதிக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்படாமல் உள்ளதால் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவங்கபடாமல் உள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேஷன் பேட்டி
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் (உறுப்பினர் எய்ம்ஸ் மதுரை) தலைமையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது 95 சதவீத பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே என்ற பதாதைகளை கைகளில் ஏந்தியபடி எய்ம்ஸ் அமைவிடத்தை பார்வையிட்டனர்.
After BJP national prez #Nadda said that 95% of work is completed for #AIIMS Madurai, MPs #ManickamTagore & #SuVenkatesan visit the site chosen for construction and hold placards asking "Where is AIIMS for which 95% work is over?" pic.twitter.com/xulZcRSBAf
— Bharathi S. P. (@aadhirabharathi) September 23, 2022
உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 23, 2022
அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை.
ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை.
அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம். pic.twitter.com/q5LlgQc4qH