பெரியகுளத்தில் பள்ளி மாணவி கடத்தல்; வாலிபர் போக்சோவில் கைது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த காவல் துறையினர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி அரசு பெண்கள் மேல்நிலையில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில், அவரை நான்கு நாட்களுக்கு முன்புகாணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோர் பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதனை தொடர்ந்து மாணவியை காவல் துறையினர் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்த விசாரனை செய்ததில் ,
அதே பகுதியைச் சேர்ந்த மகாராஜா மகன் முத்துக்கிருஷ்ணன் வயது 27 என்பவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில் முத்துக்கிருஷ்ணன் தலைமறைவான நிலையில் முத்துக் கிருஷ்ணனை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவான முத்துகிருஷ்ணனை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல் சேலத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 27). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் கோவையை சேர்ந்த 16 வயதான பிளஸ்-1 மாணவியை அடிக்கடி பின்தொடர்ந்து சென்று பேச முயன்றார். மேலும் அவர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த மாணவி, மகேந்திரனிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். இந்த நிலையில் அந்த மாணவியை சந்தித்த மகேந்திரன், நான் உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்றுக்கூறி தான் தங்கி இருக்கும் இடத்துக்கு அழைத்துச்சென்று உள்ளார்.
அங்கு யாரும் இல்லாத நிலையில், மகேந்திரன், அந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டலும் விடுத்து உள்ளார். இதையடுத்து அந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கோவை மாநகர கிழக்குப்பகுதி மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில், மகேந்திரன் அந்த மாணவியை மிரட்டி வன்கொடுமை செய்தது உறுதியானது. உடனே போக்சோ சட்டத்தின் கீழ் மகேந்திரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்த மகேந்திரன் தலைமறைவானார். இதை தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, போத்தனூர் பகுதியில் பதுங்கி இருந்த மகேந்திரனை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்