(Source: ECI/ABP News/ABP Majha)
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகளுக்கு தடை
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் சுருளி அருவி , மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுருளி மலையில் கைலாசநாதர் கோயில், பூத நாராயணர் கோயில் உள்ளது. இங்குள்ள சுருளி அருவி தமிழ்நாட்டின் மிக முக்கிய அருவிகளில் ஒன்றாக விளங்குகிறது. சுருளி அருவியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து, சுருளி அருவியில் குளித்து நீராடி, முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள்.
Cervical Cancer Vaccine : கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி.. விரைவில் இந்தியாவில்? விவரம் என்ன?
கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கனமழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதனால் சுருளி அருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலையில் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தொடர் மழை காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அதே போல் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. மாவட்டத்தில் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, மேகமலை, வருசநாடு ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை 6 மணிக்கு வினாடிக்கு 942 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, மாலை 6 மணிக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 368 கனஅடியாக அதிகரித்தது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் நேற்று இரவு 9 மணியளவில் 66 அடியாக உயர்ந்தது.
தெர்மாகோல் சாதனையை முறியடித்த சின்னவருக்கு வாழ்த்துக்கள்.. பாஜக தரப்பு ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு
அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 69 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும், வைகை அணை நீர்மட்டம் 66 அடியானதால், கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் வைகை அணை விரைவில் முழுக்கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்