மேலும் அறிய

தேனி: கனமழையால் மக்கள் துயரம்! ஓ.பன்னீர்செல்வம் அவசர கோரிக்கை! நிவாரணம் கிடைக்குமா?

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்காததன் காரணமாக நேற்று பெய்த அதி கனமழையில் தேனி மாவட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில்வெள்ளப்பெருக்கு. ஆற்றின் அருகே உள்ள வயல்வெளி மற்றும் தோட்டப்பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பெரிதும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் புகுந்து சேதங்கள் ஏற்பட்டுள்ளது. 


தேனி: கனமழையால் மக்கள் துயரம்! ஓ.பன்னீர்செல்வம் அவசர கோரிக்கை! நிவாரணம் கிடைக்குமா?

இந்த நிலையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, பருவமழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் மக்கள் பாதிப்பு அடையாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும், எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படுகின்றன என்பதைக் கண்காணித்து அதற்கு நிவாரணம் காண்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதும் மாநில அரசின் தலையாய கடமைகள் ஆகும். வடகிழக்கு பருவமழை என்பது தமிழ்நாட்டில் அதிகம் பெய்யக்கூடிய ஒன்று என்பது நன்கு தெரிந்திருந்தும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்காததன் காரணமாக நேற்று பெய்த அதி கனமழையில் தேனி மாவட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.


தேனி: கனமழையால் மக்கள் துயரம்! ஓ.பன்னீர்செல்வம் அவசர கோரிக்கை! நிவாரணம் கிடைக்குமா?

வடகிழக்கு பருவமழை என்பது அக்டோபர் மாதம் 15-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ம் வரை நிலவுகின்ற ஒன்று என்பதும், இந்தக் காலகட்டத்தில் பல கட்டங்களாக மழைப் பொழிவு இருக்கும் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்றாகும். கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் மழை விட்டுவிட்டு பெய்து வந்த நிலையில், நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டது.இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் நேற்று மழைக் கொட்டித் தீர்த்துள்ளது. 32 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற அதிகனமழை தேனி மாவட்டத்தில் பெய்துள்ளது. கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர், உப்புக்கோட்டை, குள்ளப்பகவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் சாகுபடி முடிவடைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்கள் இந்த மழையால் சேதமடைந்துள்ளன.


தேனி: கனமழையால் மக்கள் துயரம்! ஓ.பன்னீர்செல்வம் அவசர கோரிக்கை! நிவாரணம் கிடைக்குமா?

கம்பம்- சுருளிப்பட்டி சாலையில் முல்லைப் பெரியாறில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாலம் துண்டிக்கப்பட்டுள்ளது. பதினெட்டாம் கால்வாய், ஏகலூத்து ஓடைப் பகுதியில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளம் காரணமாக கம்பம் மெட்டு காலனியில் உள்ள குடியிருப்புகள் மழைநீரால் சூழ்ந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தத்தளிக்கின்றனர். கோம்பை, பண்ணைப்புரம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. விளை நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தேமடைந்துள்ளன.


தேனி: கனமழையால் மக்கள் துயரம்! ஓ.பன்னீர்செல்வம் அவசர கோரிக்கை! நிவாரணம் கிடைக்குமா?

உத்தமபாளையம் ஞானாம்பிகை கோவில் அருகே ஒரு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த தேங்காய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், கூடலூரில் தனியார் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்துவிட்டதாகவும், சிறுபுனல் மின் நிலையத்தில் சுற்றுச்சுவர் உடைந்ததன் காரணமாக தண்ணீர் உள்ளே புகுந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான கோழிகள், நூற்றுக்கணக்கான கால்நடைகள் பலியாகி உள்ளன. மொத்தத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், நிவாரண நடவடிக்கைகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை. முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு அதிகாரிகளை உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி, அந்த மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும், சேதமடைந்த பயிர்கள், கோழிகள் மற்றும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget