சாலையில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலி....எடுத்தவரையே உரிமையாளரிடம் கொடுக்க வைத்த போலீஸ்..!
நகை உரிமையாளரை கண்டறிந்து எடுத்தவரையே அழைத்து உரிமையாளரிடம் கொடுக்க வைத்த காவலர்களுக்கு பாராட்டு.
தேனி மாவட்டம் பெரியகுளம் நேற்று இரவு 10 மணி அளவில் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த சப்பானி பிள்ளை மகன் முத்துப்பாண்டி 54 வயது என்பவர் வடகரை சுப்பிரமணி சாவடி தெருவில் வசித்து வருகின்றார். இவர் இரவு சாலையில் நடந்து செல்லும் போது கீழே கிடந்த ஒரு பர்சை பார்த்துள்ளார். அதை எடுத்து பார்த்த போது அதில் பத்து பவுன் மதிக்கத்தக்க தங்க நகை இருப்பதைக் கண்டுள்ளார். உடனே யாரோ தங்க நகையை தவற விட்டுச் சென்று விட்டார்கள் எனக் கூறி அந்த நகையை எடுத்துக் கொண்டு பெரியகுளம் காவல் நிலையம் சென்று ஆய்வாளர் மீனாட்சி அவர்களை சந்தித்து அவரிடம் அந்த தங்க நகையை ஒப்படைத்துள்ளார்.
கலர், கலர் பொம்மை பார்க்கவே செமையா இருக்கு...மகிழ்ச்சியில் வியாபாரிகள்..!
இந்த நிலையில் இது யாருடைய நகை என்று விசாரணை செய்து உரியவரிடம் ஒப்படைத்து விடுங்கள் என காவலர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி விசாரணை மேற்கொண்ட போது, பெரியகுளம் வடகரை மூன்றாம் பகுதியைச் சேர்ந்த லேட் சரவணன் மனைவி பாண்டிச் செல்வி 39 வயது என்பவருடைய நகை தனியார் வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீண்டும் அடைகுகடையிலிருந்து மீட்டு வீட்டிற்கு கொண்டு செல்லும் பொழுது தவறி சாலையில் விட்டது தெரிய வந்தது .
Japan Typhoon : ஜப்பானை மிரளவைத்த நான்மடோல் புயல்: வைரலாகி பயமுறுத்தும் மிரட்டல் வீடியோ..
இதனைத் தொடர்ந்து முத்துப்பாண்டி பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி இடம் ஒப்படைத்த நகையை பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் கீதாவிடம் மீனாட்சி ஒப்படைத்துள்ளார். மேலும் முத்துப்பாண்டி வசிக்கும் பகுதிக்கு ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான காவலர்கள் அவரைத் தேடிப் பிடித்து காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து அவருக்கு உரிய மரியாதை செலுத்தி பின்பு நகையை காணாமல் சாலையில் விட்டுச் சென்ற பாண்டிச் செல்வியிடம் அவரது கையில் கொடுத்து நேரில் பாண்டிச்செல்வியிடம் ஒப்படைத்தனர்.
நகையை சாலையில் தவற விட்டுச் சென்ற பாண்டிச்செல்வி முத்துப்பாண்டி என்பவரை இருகரம் கூப்பி வணங்கி தனது மகிழ்ச்சியையும், நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தார். மனிதநேயம் மனிதநேயர் முத்துப்பாண்டிக்கு பெரியகுளம் பகுதியில் பொதுமக்களும் காவல்துறையினரும் முத்துப்பாண்டிக்கும் சம்பந்தப்பட்ட நபரை தேடி நகை ஒப்படைத்த ஆய்வாளர் மீனாட்சிக்கும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். முத்துப்பாண்டி பாண்டிச்செல்வி. என்பவரின் நகையை ஒப்படைத்ததின் மூலம் மனிதநேயம் இன்னும் மக்கள் மத்தியில் உள்ளது என்பதற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது என்பது நிதர்சனம் உண்மை.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்