மேலும் அறிய

கலர், கலர் பொம்மை பார்க்கவே செமையா இருக்கு...மகிழ்ச்சியில் வியாபாரிகள்..!

உள்ளூர் வெளியூர் வெளிநாடு என வாடிக்கையாளர்கள் வந்து வாங்கிச் செல்வதால் மகிழ்ச்சி அடையும் பொம்மை உற்பத்தி தொழிலாளர்கள்,விற்பனையாளர்கள்.

நவராத்திரி விழா:
 
நவராத்திரி விழா, செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரையிலான ஒன்பது நாட்கள் இவ்வருடத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் தெய்வத்தின் பெண் தன்மையை கொண்டாடும் விழாவாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்கள், உமா தேவியின் மூன்று குணங்களாக வகைப்படுத்தப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் தேவி உக்கிரமாக இருப்பார், அதாவது துர்கா காளி வடிவங்கள் போன்று காணப்படுவார். அடுத்த மூன்று நாட்கள் சாந்தமாக தேவி இருப்பார், அதாவது செல்வ வளத்திற்கு ஏற்றவராக லஷ்மி வடிவில் இருப்பார். அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி வடிவில் இருப்பார், அதாவது ஞான வடிவில் இருப்பார்.
 
கலர், கலர் பொம்மை பார்க்கவே செமையா இருக்கு...மகிழ்ச்சியில் வியாபாரிகள்..!
 
நவராத்திரி விழா என்றால் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கொலு பொம்மைகள் தான், பாரம்பரியமாக கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரியை கொண்டாடுபவர்கள் கொலு பொம்மைகளை வாங்கிட வருகை தருவது காஞ்சிபுரத்திற்கு தான். உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்திவரதர் புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் கோயில்  பகுதிக்கு அருகிலேயே அஸ்தகரி தெரு என்று அழைக்கப்படும் பொம்மை கார தெரு உள்ளது.

கலர், கலர் பொம்மை பார்க்கவே செமையா இருக்கு...மகிழ்ச்சியில் வியாபாரிகள்..!
 
பொம்மை கார தெரு 
 
இங்கு தெரு முழுவதும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக வீடுகள் தோறும் பொம்மை செய்யும் தொழிலில் ஈடுபட்டு காகித கூழ் பொம்மைகள், களிமண் பொம்மைகள் தயாரித்து பல்வேறு விதவிதமான வண்ணங்களை தீட்டி  தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம், கட்டுப்பாடுகள் காரணமாக பொம்மை உற்பத்தி விற்பனை தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்கும் பொம்மை தொழிலாளர்கள் சிரமப்பட்டு வந்தனர். தற்பொழுது கொரோனா அச்சம் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்ந்து இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் திருவிழாக்களும் நடைபெற துவங்கி உள்ளது.
 
கலர், கலர் பொம்மை பார்க்கவே செமையா இருக்கு...மகிழ்ச்சியில் வியாபாரிகள்..!
 
கலர் கலர் பொம்மைகள்
 
இன்னும் சில வாரங்களில் தொடங்கும் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி திருவிழாவிற்காக விறுவிறுப்பாக கொலு பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். பொம்மைகள் தயாரிப்பு வரிசையில் கைலாய செட், திருப்பாற்கடல் செட், தசாவதார செட் சப்தரிஷி செட், பெருமாள் பிரம்மோற்சவ செட் திருமண வைபவம் செட், சீமந்தம் காது குத்தல் செட் காய்கறி விற்பனை செட்,  ராமாயண மகாபாரத காட்சிகள், பல்வேறு விதமான சுவாமி சிலைகள் உள்ளிட்டவை புத்தம் புதிய வடிவத்தில் தயாரித்து கண்களை கவரும் வகையில் வண்ணங்களை தீட்டி விற்பனை செய்து வருகின்றனர்.
 
கலர், கலர் பொம்மை பார்க்கவே செமையா இருக்கு...மகிழ்ச்சியில் வியாபாரிகள்..!
 
அதிகரித்த விற்பனை
 
விதவிதமான கொலு பொம்மைகளை வாங்கிச் செல்ல உள்ளூர் மட்டுமல்லாது, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலும் இருந்தும் வாடிக்கையாளர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள பொம்மைக்கார தெருவிற்கு வருகை தந்து, வீடு வீடாகச் சென்று கொலு பொம்மைகளை பார்வையிட்டு, தேர்வு செய்து தங்களுக்கு தேவையான பொம்மைகளை மற்ற இடங்களைக் காட்டிலும் விலை குறைவாய் கிடைப்பதால் வாங்கி செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கலர், கலர் பொம்மை பார்க்கவே செமையா இருக்கு...மகிழ்ச்சியில் வியாபாரிகள்..!
 
நேரில் வந்து வாங்க முடியாதவர்களுக்கு தொலைபேசி வாயிலாகவும் ஆர்டர் பெற்றுக் கொண்டு பார்சல் செய்து அனுப்பி வருகின்றனர். மேலும் ஒரு சிறப்பாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் பொம்மைகளை பார்சல் செய்து விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நவராத்திரி கொலு பொம்மை விற்பனை காஞ்சிபுரம் பொம்மைக்கார தெரு பகுதியில் சூடு பிடித்து வருவதால் தொழிலாளர்களும் விற்பனையாளர்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்
உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Embed widget