மருத்துவர் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியல் - பெரியகுளத்தில் பரபரப்பு
ஊசி போட்டதாகவும், ஊசி போட்ட சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததால் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் தேனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரின் கிளினிக்கில் சிகிச்சை பெற வந்த நோயாளி தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் தேனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அரசு மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவரை விசாரணைக்காக அழைத்து சென்றதோடு இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட தொ.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சேவுக பாண்டி (வயது 45). இவர் உடல் உபாதை ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொது மருத்துவத்தில் MD முடித்த மருத்துவர் ராம்குமார் கிளினிக் நடத்தி வரும் நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் அங்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் மருத்துவர் ராம்குமார் சேவுகபாண்டிக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
தீவிரமாகும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; 4-வது நாளாக இன்றும் கைது!
அப்போது ஊசி போட்டதாகவும், ஊசி போட்ட சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததால் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் தேனி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் மற்றும் தேனி மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்தன் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபின் மருத்துவம் பார்த்த மருத்துவர் ராம்குமார் MD என்பவரை விசாரணைக்காக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
TN Assembly: காவிரி விவகாரம்.. சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி..
இதனை அடுத்து சிகிச்சை பலனின்றி இறந்த சேவுபாண்டியன் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் கொண்டு சென்றனர். அரசு மருத்துவமனை மருத்துவர் தனியாக நடத்தி வரும் கிளினிக்கில் சிகிச்சைக்காக சென்ற நபர் உயிர் இழந்ததால் உறவினர்களின் போராட்டத்தால் தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.