குறைந்த வட்டியில் கடனுதவி வேண்டுமா..? - குறுந்தொழில் முனைவோர்கள் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்
குறு தொழில் முனைவோர்கள் மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்கள் கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடனுதவி பெறலாம் – தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
வங்கிகளில் கடனுதவி பெற்று தொழில் முனைவோர்கள் தங்களது தொழில்களை முன்னேற்றத்தில் கொண்டு செல்ல பல்வேறு வழிமுறைகளை தமிழக அரசு சார்பிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி) கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியில் 7% வட்டியில் ரூபாய் 20 இலட்சம் வரை நடைமுறை மூலதனம் மற்றும் மூலதன கடன்கள் வழங்கும் புதிய திட்டமான கலைஞர் கடன் உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அசையா சொத்து அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்பட உள்ளது.
Fake Court: போலி சுங்கச்சாவடி, போலி ரூபாய் நோட்டு போல இப்போ போலி நீதிமன்றம்: குஜராத் சம்பவங்கள்!
இத்திட்டத்தின் கீழ் புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்களும் கடனுதவி பெற முடியும். தொழில்முனைவோர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும் அதிகபட்ச வயது 65-க்கு மிகாமல் இருக்க வேண்டும். தொழில் முனைவோர்களுக்கு சிபில் மதிப்பீடு 600 புள்ளிகள் குறையாமல் மற்றும் இரண்டு ஆண்டுகளாக ஏற்கனவே லாபத்தில் இயங்கும் நிறுவனங்களாக இருத்தல் வேண்டும். மேலும், பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்கள் விதிமுறைக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு மாற்றி கொள்ளலாம்.
NTET: தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க இன்றே கடைசி- மறந்துடாதீங்க!
தேனி மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள குறுந்தொழில் முனைவோர்கள் மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மற்றும் கிளை மேலாளர், தாய்கோ வங்கி, 278-D. செல்வ பிரபு டவர்ஸ், கம்பம் மெயின் ரோடு, தேனி 625531 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது 04546 252163, 9600710735, 8695565626 என்ற எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.