தேனி அருகே முன்விரோதத்தால் கொலை; ஒருவருக்கு ஆயுள் தண்டனை
பெரியகுளம் பகுதியில் முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு.
தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தெய்வேந்திரபுறம் காமராஜர் நகர் பகுதியில் சேர்ந்தவர் முருகன். அதேபகுதி அருகே உள்ள போடான்குளம் கம்மாக்கரை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (43) செல்வராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி காலை சுமார் 11 மணி அளவில் செல்வராஜ் அவரது மகள் மற்றும் பேத்தி ஆகியோர் அந்த புறம்போக்கு விவசாய நிலத்தில் களை எடுத்துக் கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த முருகன், செல்வராஜிடம் எவ்வாறு என்னுடைய நிலத்தில் உள்ள வரப்பை வெட்டி ஆக்கிரமிப்பு செய்தாய், நீ உயிருடன் இருந்தால் நான் விவசாயம் செய்ய முடியாது என கூறி தன் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து செல்வராஜின் இடது காலை துண்டாக வெட்டி எடுத்தார். அதனால் செல்வராஜின் மகள் மற்றும் பேத்தி அலறி கூச்சலிடவே முருகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். செல்வராஜுக்கு ரத்தம் வெளியேறியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரியகுளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
Crime: கணவனை உயிரோடு எரித்துக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள்தண்டனை - நடந்தது என்ன?
Pen Monument Rules: பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசின் நிபந்தனைகள் என்னென்ன? முழு விவரம்
இந்த நிலையில் முருகன் குற்றவாளி என தீர்மானம் செய்யப்பட்டு நீதிபதி கணேசன் அவருக்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் அபராத தொகை கட்ட தவறினால் ஓராண்டு மெய்க்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்