கைப்பந்த போட்டி; முதல் பரிசை தட்டிச்சென்ற கோவை கற்பகம் யூனிவர்சிட்டி
பொங்கல் திருநாளை முன்னிட்டு இளைஞர் விளையாட்டு கழகம் சார்பில் சீதையம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான 35ஆம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு இளைஞர் விளையாட்டு கழகத்தின் சார்பாக 35வது ஆண்டு சீதையம்மாள் நினைவு சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 3 நாட்ளுக்கு முன்பு துவங்கியது. முதல் 3 நாட்கள் நடைபெற்ற போட்டிகள் பகல், இரவு போட்டிகளாக நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தின் சென்னை, கோவை, திருச்சி, பொள்ளாச்சி, மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 10 அணிகள் பங்கேற்று உள்ளது.
மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டிகளை பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நல்லு துவக்கி வைத்தார். முதல் நாள் போட்டியில் கோவை கற்பகம் யூனிவர்சிட்டி அணியை, எதிர்த்து விளையாடிய சென்னை விளையாட்டு விடுதி அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் கோவை கற்பகம் யூனிவர்சிட்டி அணி (25க்கு 19 ) (25க்கு 17) என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் சென்னை தமிழ்நாடு காவல்துறை அணிக்கும், சென்னை லயோலா கல்லூரி அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ( 25க்கு 20 ) (25க்கு 17) என்ற புள்ளி அடிப்படையில் சென்னை லயோலா கல்லூரி அணி வெற்றி பெற்றது. மேலும் விளையாட்டுப் போட்டிகளை தேனி மாவட்ட அளவிலான ஏராளமான விளையாட்டு ரசிகர்கள் கண்டுகளித்தனர். முதல் இரண்டு நாட்கள் நடைபெறும் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற இரண்டு அணிகள் இறுதி போட்டியில் பங்கேற்றனர்.
முதல் போட்டியாக பொள்ளாச்சி எஸ் டி சி அணிக்கும், சென்னை வைஷ்ணவா அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் பொள்ளாச்சி எஸ்டிசி அணி (25க்கு17) (25க்கு18) என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இரண்டாவதாக சென்னை தமிழ்நாடு காவல்துறை அணிக்கும், கோவை கற்பகம் யுனிவர்சிட்டி அணைக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை தமிழ்நாடு காவல்துறை அணி ( 25க்கு 19) (25க்கு 18) என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது. மூன்றாவதாக சென்னை லயோலா கல்லூரி கணிக்கும், சென்னை விளையாட்டு விடுதி அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணி 25க்கு 23 மற்றும் 25க்கு 20 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றும் இன்றும் நடைபெறும் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற இரண்டு அணிகள் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் பங்கேற்க உள்ளது. மேலும் இப்போட்டிகள் அனைத்தும் லீக் சுற்று முறையில் நடைபெற்றது. 3வது நாளாக மின்னொழியில் நடைபெற்ற இறுதி லீக் சுற்று போட்டியில் சென்னை லயோலா அணிக்கும், சென்னை வைஷ்ணவா கல்லூரி அணிக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்றது. இறுதியில் சென்னை வைஷ்ணவா கல்லூரி அணி (26 க்கு 25) (25 க்கு 24 ) என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது.
மூன்று நாட்களாக நடைபெற்ற லீக் சுற்றுப் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற கோவை கற்பகம் யூனிவர்சிட்டி அணி முதலிடத்தையும், அதற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை சென்னை லயோலா கல்லூரி அணியும், மூன்றாம் இடத்தை தமிழ்நாடு காவல்துறை அணியினர் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசும் இளைஞர் விளையாட்டு கழக அமைப்பினர் வழங்கினர்.

