மழையின்மை, வெயில் தாக்கம்.. 117 அடியாகவுள்ள முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்
முல்லை பெரியாறு அணையில் நீர் வரத்து முற்றிலும் குறைந்துள்ள நிலையில் , கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இரண்டாம் போக நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக கேரள எல்லையை இணைக்கும் ஒரு முக்கிய மாவட்டமாக பார்க்கப்படுவதும் தேனி மாவட்டம். தேனி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விளங்குவது விவசாயம். இப்பகுதியில் நெல், தென்னை, திராட்சை, வாழை உள்ளிட்ட பயிர்களின் விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் காய்கறிகளின் உற்பத்தியும் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் விவசாயத்திற்கு உயிர்நாடியாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை.
Kanchipuram Accident : கோயில் ஊர்வலத்தில் ஜெனரேட்டரில் சிக்கிய தலைமுடி.. சிறுமி உயிரிழந்த சோகம்..
தற்போது முல்லைப்பெரியாறு அணையில் நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. வழக்கமாக வருடந்தோறும் கோடைகாலங்களில் மழையின் அளவு குறைந்திருக்கும் ஆதலால் அணையில் நீர் இருப்பும் குறையும். தற்போது கோடை காலம் நெறுங்கி வரும் நிலையில் அதற்கு முன்பாகவே அணையில் நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. இந்த நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது இரண்டாம் போக விவசாயத்தில் நெல் அறுவடை பணிகளும் நடந்து வருகிறது.
சென்னைக்கு வந்த திருச்சானூர் பத்மாவதி தாயார் - TTD கோயிலில் களைக்கட்டும் கும்பாபிஷேகம்
கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து பழனிசெட்டிபட்டிவரையில் சுமார் 14,707 ஏக்கர் பரப்பளவில் வருடத்திற்கு இரண்டு போகம் நெல் விவசாயம் செய்து வருவது வழக்கம். வருடத்தில் ஜூன் முதல் வாரத்தில் முதல் போக சாகுபடி செய்யப்பட்டு 3 மாதங்களில் முதல்போக நெல் விவசாயத்திற்கான அறுவடை பணிகள் முடியும் நிலையில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கான நாத்து நடுதல் பணிகள் நடைபெறும். இந்த நிலையில் தற்போது இரண்டாம் போக நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கம்பம், சுருளிப்பட்டி, நாராயணதேவன் பட்டி, காமயகவுண்டன்பட்டி, சாமாண்டிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டாம் போக நெல் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முல்லை பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் முற்றிலும் மழையின்மை , வெயிலின் தாக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் அணையின் நீர்மட்டமானது குறைந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.55 (142) அடியாகவும் நீர் இருப்பு 2186 கன அடியாகவும், நீர் வரத்து முற்றிலும் இல்லை. நீர் திறப்பு 250 கன அடியாகவும் உள்ளது.
தேனி: பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 2,129 மாணவர்கள்.. நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்