மேலும் அறிய

National Vaccination Day 2023: தடுப்பூசி என்னும் அறிவியல் அதிசயம்! இன்று தேசிய தடுப்பூசி தினம்… ஏன் கொண்டாடுகிறோம்?

போலியோ, தட்டம்மை, ரூபெல்லா மற்றும் டெட்டனஸ் போன்ற பல உயிருக்கு ஆபத்தான நோய்களின் வரிசையில் சமீபத்திய கொரோனா வரை, பரவலைக் குறைப்பதில் இந்த அறிவியல் அதிசயம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் தேசிய தடுப்பூசி தினம் என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. பல்ஸ் போலியோ நோய்த்தடுப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 அன்று இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

தேசிய தடுப்பூசி தினம்

தடுப்பூசி பொது சுகாதாரத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். தொற்று நோய்களிலிருந்து தனிநபர்களையும் சமூகங்களையும் பாதுகாக்க உதவுகிறது. போலியோ, தட்டம்மை, ரூபெல்லா மற்றும் டெட்டனஸ் போன்ற பல உயிருக்கு ஆபத்தான நோய்களின் வரிசையில் சமீபத்திய கொரோனா வரை, பரவலைக் குறைப்பதில் இந்த அறிவியல் அதிசயம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. இந்த தேசிய தடுப்பூசி தினம் தடுப்பூசி போடுவதை நினைவூட்டுகிறது மற்றும் தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் தடுப்பூசியின் நன்மைகளை எடுத்துக்காட்டுகிறது.

National Vaccination Day 2023: தடுப்பூசி என்னும் அறிவியல் அதிசயம்! இன்று தேசிய தடுப்பூசி தினம்… ஏன் கொண்டாடுகிறோம்?

தேசிய தடுப்பூசி தின வரலாறு

இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 ஆம் தேதியை தேசிய தடுப்பூசி தினமாக அறிவித்துள்ளது. இந்த தேதி முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக 1995 இல், பல்ஸ் போலியோ நோய்த்தடுப்பு திட்டம் தொடங்கப்பட்ட பிறகு கொண்டாடப்பட்டது. 1988 இல் தொடங்கிய உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய போலியோ ஒழிப்பு முன்முயற்சியின் ஒரு பகுதியாக 1995 ஆம் ஆண்டில் வாய்வழி போலியோ தடுப்பூசியின் முதல் டோஸ் இந்த நாளில் வழங்கப்பட்டது. 0-5 வயதுடைய குழந்தைகள் பொது சுகாதார மையங்களில் இரண்டு சொட்டு தடுப்பு மருந்துகளை வாய்வழியாகப் பெற்றனர். போலியோவுக்கு எதிரான தடுப்பூசி ஏற்கனவே 1978 இல் தொடங்கப்பட்டிருந்தாலும், மார்ச் 27, 2014 அன்று WHO ஆல் இந்தியா போலியோ இல்லாததாக அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்: Chhavi Mittal : குழந்தைகளுக்கு உதட்டில் முத்தம்... பாலியல் அத்துமீறல் என விமர்சித்த நெட்டிசன்கள்.. புகைப்படங்களுடன் பதிலடி தந்த நடிகை!

தேசிய தடுப்பூசி தின முக்கியத்துவம்

உயிர்களைக் காப்பாற்ற தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புத் திட்டங்கள் எவ்வாறு முக்கியமானவை என்பதை இந்த நாள் கவனத்தை ஈர்க்கிறது. தடுப்பூசிகளால் உலகில் உள்ள மக்கள் ஆரோக்கியமாக வாழ முடியும். மேலும், தேசிய தடுப்பூசி தினம், தடுப்பூசிகளின் வளர்ச்சியின் குறிப்பிடத்தக்க மனித சாதனைகள் பற்றியும் பேசுகிறது. இதை அங்கீகரிக்கும் வகையில், இந்த தடுப்பூசிகளை மக்கள் பெறுவதை உறுதி செய்யும் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சரியான வாய்ப்பாகவும் இந்த நாள் உள்ளது. எண்ணிலடங்கா உயிர்களைக் காக்கும் தடுப்பூசிகளை உருவாக்க அவர்களின் அயராத முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய தடுப்பூசி தினம் கொண்டாடப்படுகிறது.

National Vaccination Day 2023: தடுப்பூசி என்னும் அறிவியல் அதிசயம்! இன்று தேசிய தடுப்பூசி தினம்… ஏன் கொண்டாடுகிறோம்?

குவோட்ஸ்

உங்கள் குழந்தையை போலியோவிலிருந்து காப்பாற்ற பிரார்த்தனை செய்யப்போகிறீர்களா? அல்லது தடுப்பூசி போடப்போகிறீர்களா? என்ற கேள்வி வந்தால், அறிவியலை தேர்ந்தெடுங்கள் - கார்ல் சாகன்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது முக்கியம், இதனால் அவர்கள் பெரியவர்களாக மாற வாய்ப்புள்ளது - பிராட் மெக்கே

தடுப்பூசிகள் பற்றிய தவறான தகவல் அல்லது அவநம்பிக்கை என்பது, தட்டம்மை போன்று வேகமாகப் பரவக்கூடிய ஒரு விஷயமாக இருக்கலாம் - தெரசா டாம்.

தொற்று நோய் உள்ளபோது, தடுப்பூசிகள் இல்லையென்றால், மக்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை - சேத் பெர்க்லி.

தடுப்பூசிகள் உயிர்களைக் காப்பாற்றுகின்றன; பயம் அவர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது, பெற்றோர்கள் கேட்க வேண்டிய எளிய செய்தி இது - ஜெஃப்ரி க்ளூகர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget