மேலும் அறிய
Advertisement
Kanchipuram Accident : கோயில் ஊர்வலத்தில் ஜெனரேட்டரில் சிக்கிய தலைமுடி.. சிறுமி உயிரிழந்த சோகம்..
கிராம கோயில் திருவிழா ஊர்வலத்தில் 13 வயது சிறுமியின் தலைமுடி ஜெனரேட்டரில் மாற்றி சிறுமி படுகாயம். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலி.
அங்காளம்மன் கோவில் விழா
காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தாங்கள் கிராமத்தில் மூன்று இரவு அங்காளம்மன் கோவில் கடைசி நாள் விழா நடைபெற்றது. மாட்டு வண்டியில் வைத்து சாமி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது மாட்டு வண்டியின் பின்புறம் வண்ண விளக்குகள் எரிவதற்காக ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது.
ஜெனரேட்டரில் சிக்கிய தலைமுடி
சுவாமி ஊர்வலத்தின் பின்னே சென்னை சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் லாவண்யா என்ற சிறுமி மாட்டு வண்டியின் பின்னே ஏரி அமர முயற்சித்த பொழுது, அங்கிருந்த ஜெனரேட்டரில் லாவண்யாவின் தலைமுடி சிக்கிக்கொண்டு முடி பிய்த்துக்கொண்டு போனதால் படுகாயம் அடைந்த லாவண்யாவை கிராமத்தினர் தூக்கிக்கொண்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தவர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .இது தொடர்பாக ஜெனரேட்டர் வாடகை விடும் உரிமையாளர் முனுசாமி என்பவரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து கிராம மக்கள் கூறுகையில், சரவணன் என்பவர் சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வருபவராகவும், அவருடைய மனைவி இறந்து விட்ட காரணத்தினால், மனைவியின் பெற்றோர்களான விச்சந்தாங்கல் கிராமத்தில் உள்ள தாத்தா காண்டீபன் மற்றும் பாட்டி லதாவிடம் கடந்த நான்கு வருடங்களாக பராமரிப்பில் வளர்ந்து வந்தார் . லாவண்யா களக்காட்டூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். லாவண்யாவின் தம்பி புவனேஸ்வர் அதே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
நன்றாக படிக்கக்கூடியவர்
லாவண்யா பள்ளியில் நன்றாக படிக்க கூடியவர் என்றும் பல கல்வி சார்ந்த மெடல்களை வாங்கி இருப்பதாகவும் அப்துல் கலாம் உள்ளிட்ட சில சான்றிதழ்களையும் வாங்கியுள்ளதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தான் ஜெனரேட்டரில் சிக்கி சிறுமி இறந்தது, கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவில் திருவிழா , பொழுது காவல்துறையினர் பாதுகாப்புக்கு செல்வது வழக்கம், நடைபெற்ற திருவிழாவில் காவலர்கள் இல்லாததும், இந்த விபத்துக்கு காரணம் என கருதப்படுகிறது .எனவே இது போன்ற திருவிழாக்கள் மற்றும் ஜெனரேட்டர் மின்விளக்குகள் ஒளிர்விக்கும் பொழுது பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion